மாவட்டத்தில் ஏழரை கோடி மதிப்பில் விலையில்லா ஆடுகள் விநியோயகம்

திருவள்ளூர் மாவட்டத்தில் 2019-2020ஆம் ஆண்டில் 5873 பயனாளிகளுக்கு ஏழரை கோடி ரூபாய் மதிப்பில் தலா 4 விலையில்லா ஆடுகள்
மாவட்டத்தில் ஏழரை கோடி மதிப்பில் விலையில்லா ஆடுகள் விநியோயகம்

கும்மிடிப்பூண்டி: திருவள்ளூர் மாவட்டத்தில் 2019-2020ஆம் ஆண்டில் 5873 பயனாளிகளுக்கு ஏழரை கோடி ரூபாய் மதிப்பில் தலா 4 விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டு ஏழை எளியோர்கள் வாழ்க்கை மேம்பட்டுள்ளதாக கும்மிடிப்பூண்டி அடுத்த குருவாட்டுச்சேரியில் சனிக்கிழமை நடைபெற்ற தமிழக அரசின் விலையில்லா ஆடுகள்  வழங்கும் விழாவில் தெரிவிக்கப்பட்டது.

கும்மிடிப்பூண்டி அடுத்த குருவாட்டுச்சேரியில் 92 பயனாளிகளுக்கு தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கும் விழா ஊராட்சி தலைவர் எஸ்.கோமதி சேகர் தலைமையில் நடைபெற்றது.

விழாவிற்கு மண்டல கால்நடை துறை இணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன், உதவி இயக்குனர் கோபி கிருஷ்ணா, கால்நடை உதவி மருத்துவர் டாக்டர் உமா, ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால்நாயுடு, குருவாட்டுச்சேரி ஊராட்சி துணை தலைவர் துளசி மனோகரன், ஒன்றிய கவுன்சிலர்கள் ஜோதி,ரோஜா ரமேஷ்குமார், ரவக்கிளி,   ஊராட்சி மன்ற தலைவர் சாணாபுத்தூர் அம்பிகா பிர்லா , ஊராட்சி செயலாளர் திருமலை முன்னிலை வகித்தனர்.

விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாக கும்மிடிப்பூண்டி எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார், கும்மிடிப்பூண்டி ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவக்குமார், ஒன்றிய குழு துணை தலைவர் மாலதி குணசேகரன் பங்கேற்றனர்.

விழாவில் கால்நடைத்துறை மண்டல துணை இயக்குனர் டாக்டர் ராஜேந்திரன் பேசும் போது முன்னாள் முதல்வர் ஏழை பெண்களுக்காக அறிமுகப்படுத்திய இந்த விலையில்லா ஆடுகள் வழங்கும் திட்டத்தில் 1 பயனாளிக்கு 4 ஆடுகள் வாங்க 10,000ரூபாய்,சிறிய கொட்டகை அமைக்க 2ஆயிரம் ரூபாய், ஆடுகளின் காப்பீட்டிற்காக ரூ.300, பயனாளர்களின் 3 நாள் பயிற்சிக்கு ரூ.300, ஆடுகளை வாங்கி வர பயனாளிக்கு ரூ.150 என ஒவ்வொரு பயனாளிக்கும் தலா ரூ.12,750 வழங்கப்படுகிறது.

இந்நிலையில் கடந்த 2019-2020ஆண்டில் திருவள்ளூர் மாவட்டத்தில் 5873 பயனாளிகளுக்கு ரூ.7 கோடியே 50 லட்சம் மதிப்பிலான தமிழக அரசின் விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டுள்ளதாகவும், குருவாட்டுச்சேரில் 92 பயனாளிகளுக்கு ரூ.11,73,000 ரூபாய் மதிப்பிலான விலையில்லா ஆடுகள் வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார்.

விழாவில் சிறப்புரையாற்றிய எம்எல்ஏ கே.எஸ்.விஜயகுமார் தமிழக அரசின் விலையில்லா ஆடுகளை பெற்ற பல பயனாளிகள் 4 ஆடுகளை வைத்து 20முதல் 80 ஆடுகள் வரை பெருக்கி பொருளாதாரத்தில் மேம்பாடு அமைந்துள்ளார்கள் என்றும், ஆதரவற்ற பெண்களே பெரும்பாலும் பயனாளிகளாக உள்ளனர் என்றும், பயனாளிகள் யாரும் ஆடுகளை 4ஆண்டுகளுக்கு விற்காமல் இருந்தால் ஆண்டிற்கு 10ஆடுகளை  விற்று பொருளாதாரத்தில் மேம்பாடு அடைய வேண்டும் என்றும்,தமிழகத்தில் விவசாயிகளுக்கு கூட்டுறவு துறை மூலம் ரூ.11 ஆயிரம் கோடி கடனுதவி பட்ஜெட்டில் வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் பேசினார்.

விழாவில் கும்மிடிப்பூண்டி நகர அதிமுக செயலாளர் மு.க.சேகர்,ராஜேந்திரன் எஸ்.டி.டி.ரவி, இமையம் மனோனஜ், செல்வ தமிழன், சினிமா சேகர்,கே.பி.செல்வராஜ், லட்சுமணன், புருஷோத்தமன், சௌந்தரபாண்டியன்,முன்னாள் கவுன்சிலர் கோபி பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com