அந்தியூர் அருகே ஆமை வேகத்தில் சாலைப்பணி

அந்தியூர் அருகே உள்ள சங்கராப்பாளையம் கிராம ஊராட்சியில் சாலைப்பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதால், மாணவர்கள் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.
அந்தியூர் ஒன்றியம், சங்கராப்பாளையம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட வட்டக்காடு தார்சாலை பெயர்த்தெடுக்கப்பட்டு, தார்சாலைப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.
அந்தியூர் ஒன்றியம், சங்கராப்பாளையம் கிராம ஊராட்சிக்கு உட்பட்ட வட்டக்காடு தார்சாலை பெயர்த்தெடுக்கப்பட்டு, தார்சாலைப் பணி கிடப்பில் போடப்பட்டுள்ளது.

அந்தியூர்: அந்தியூர் அருகே உள்ள சங்கராப்பாளையம் கிராம ஊராட்சியில் சாலைப்பணி ஆமை வேகத்தில் நடந்து வருவதால், மாணவர்கள் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

அந்தியூர் ஊராட்சி ஒன்றியம், சங்கராப்பாளையம் கிராம ஊராட்சியில் சாலைப் பணிகள் நடந்து வருகின்றன. அந்தியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜாகிருஷ்ணன் தொகுதி நிதி மூலம், பல லட்சம் ரூபாய் செலவில் சாலைப் பணிகள் நடந்து வருகின்றன. இதில், சங்கராப்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட வட்டக்காடு பால் கொள்முதல் நிலையத்தில் இருந்து, காக்காயனூர் செல்லும் வரை புதிய தார்சாலை அமைக்க திட்டமிடப்பட்டது. கடந்த ஒரு மாதத்திற்கு முன், பால் கொள்முதல் நிலையத்தில் இருந்து காக்காயனூர் வரையிலான நான்கு கிலோமீட்டர் தொலைவுக்கு, பழைய சாலை பெயர்த்தெடுக்கப்பட்டன. பழைய தார்சாலை பெயர்த்தெடுக்கப்பட்டதோடு சரி, புதிய தார்சாலை அமைக்க எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால், நான்கு சக்கர மற்றும் இரண்டு சக்கர வாகனங்களில் செல்வோர் மிகுந்த அவதிக்குள்ளாகி வருகின்றனர். 

மேலும், தார்சாலை பெயர்த்தெடுக்கப்பட்டதால், அந்தியூரில் இருந்து காக்காயனூர்‌ செல்லும் பி23 பேருந்து, பால் கொள்முதல் நிலையம் பகுதியிலே திருப்பப்படுகிறது. இதன் காரணமாக, வட்டக்காட்டில் இருந்து பள்ளிக்கு செல்லும் மாணாக்கர்கள், வேலைக்குச் செல்லும் பொதுமக்கள் என பல்வேறு தரப்பினரும் ஒரு கிலோமீட்டர் நடந்தே செல்ல வேண்டியுள்ளது. அதேபோல், காக்காயனூரிலிருந்து வரும் பள்ளி மாணாக்கர்கள் பொதுமக்கள் நான்கு கிலோமீட்டர் தொலைவு கடந்து வரவேண்டி உள்ளது.

குறிப்பாக, அடர்ந்த வனப்பகுதியில் அமைந்திருக்கும் காக்காயனூர் பொதுமக்கள், இரவு நேரங்களில் ஊருக்கு அச்சத்தோடு நடந்தே செல்ல வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ஆமை வேகத்தில் நடக்கும் சாலைப் பணியை, துரிதப்படுத்தி விரைவில் புதிய தார்சாலை அமைக்க வேண்டும் என மாணாக்கர்களும், பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com