துறையூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலாவதியான மாத்திரை வழங்கப்பட்டதா?

திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள எரகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர் சிகிச்சை பெற்றுவரும் ஒருவருக்கு காலாவதியான 
துறையூர் அருகே அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் காலாவதியான மாத்திரை வழங்கப்பட்டதா?

துறையூர்: திருச்சி மாவட்டம் துறையூர் அருகேயுள்ள எரகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர் சிகிச்சை பெற்றுவரும் ஒருவருக்கு காலாவதியான மாத்திரை வழங்கப்பட்டதா என்று துறை ரீதியாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென அந்த பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

எரகுடி அருகே வெங்கட்டம்மாள் சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்தவர்
மாரிமுத்து மகன் சிவபாலகுமார்(44). கூலி தொழிலாளி. ஓராண்டுக்கு முன்பு உடல் நல பாதிப்புக்குள்ளான சிவபாலகுமார் துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை மேற்கொண்ட போது அவருக்கு நீரிழிவு நோயும்,
ரத்த நாள பாதிப்பும் இருப்பது தெரிந்தது.

இதனையடுத்து அவருக்கு துறையூர் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மருந்துகள் வழங்கினர். மேலும் மாத்திரைகளுக்காக துறையூர் வரை வந்து செல்லாமல் அதனை அருகிலுள்ள எரகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தொடர்ந்து பெற்றுக்கொள்ளுமாறு அறிவுறத்தினராம்.

இதனையடுத்து அவர் எரகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 15 நாள்களுக்கு ஒருமுறை மாத்திரைகள் பெற்று உட்கொண்டு வந்தார்.  

இந்த நிலையில் பிப். 20 ஆம் தேதி எரகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் வழக்கம் போல மாத்திரை பெற்றுச் சென்றார். மாத்திரைகளை சாப்பிட்ட பின்னர் வழக்கத்துக்கு மாறாக உடல் அசவுகரியம் ஏற்படுவதை உணர்ந்தவர் குடும்ப உறுப்பினர்கள் உதவியுடன் எரகுடி அரசு ஆரம்ப சுகாதார
நிலையத்தில் கொடுத்த மாத்திரையை எடுத்து பார்த்த போது அதில் ஒரு
குறிப்பட்ட வகையான மாத்திரை அட்டையின் மீது 2020 ஜனவரி மாதத்துடன்
காலவதியாகியிருந்தது தெரிந்தது.

இதனையடுத்து சிவபாலகுமார் மீண்டும் ஆரம்ப சுகாதார நிலையம் சென்று
விசாரித்த போது அவர்கள் உரிய பதிலளிக்காமல் காலாவதியான மாத்திரைகளை பெற்றுக் கொண்டு மாற்று மாத்திரை வழங்கினராம். இந்த சம்பவத்தை சிவபாலகுமார் இயல்பாக ஊரில் தெரிந்தவர்களிடம் சொல்ல அந்த பகுதி மக்களிடையே பீதியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியது.

தனியார் மருத்துவ வசதி பெற உரிய வசதியின்றியே ஏழை மக்கள் அரசு மருத்துவமனையில் மருந்துகள் பெறுகின்றனர்.

இந்த நிலையில் காலாவதியான மருந்துகளை மருந்துகள் விநியோகம் செய்யும் பிரிவிலிருந்து உடனடியாக அகற்றாமல் அதனை ஏழை நோயாளிகளுக்கு விநியோகித்த அரசு ஆரம்ப சுகாதார பணியாளர்கள் செயல் பொறுப்பற்றதாக உள்ளது. எனவே கவனக்குறைவாக உடல் நலனுக்கு தீங்கு ஏற்படுத்தும் என்றும் அறிந்திருந்த போதும் கவனக்குறைவாக காலாவதியான மருந்துகளை வழங்கிய எரகுடி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உரிய வகையில் துறை விசாரணை மேற்கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டுமென அந்த பகுதிமக்களும் சிவபாலகுமாரும் கோரிக்கை
விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com