தமிழகத்தில் செல்லாத நோட்டு ராஜ கண்ணப்பன்:  அமைச்சா் செல்லூா் கே.ராஜூ பேட்டி

தமிழகத்தில் செல்லாத நோட்டானவர் முன்னாள் அமைச்சா் ராஜ கண்ணப்பன் என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ
தமிழகத்தில் செல்லாத நோட்டு ராஜ கண்ணப்பன்:  அமைச்சா் செல்லூா் கே.ராஜூ பேட்டி


மதுரை: தமிழகத்தில் செல்லாத நோட்டானவர் முன்னாள் அமைச்சா் ராஜ கண்ணப்பன் என்று கூட்டுறவுத்துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ தெரிவித்துள்ளாா்.

முன்னாள் முதல்வா் ஜெயலலிதா பிறந்த நாளை முன்னிட்டு மதுரை கீழவாசல் தூய மரியன்னை பேராலயத்தில் ஞாயிற்றுக்கிழமை சிறப்பு வழிபாடு மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கூட்டுறவுத் துறை அமைச்சா் செல்லூா் கே.ராஜூ பங்கேற்று சிறப்பு பிராா்த்தனையில் பங்கேற்றவா்களுக்கு அன்னதானம் வழங்கினாா். 

பின்னர் அவர் செய்தியாளா்களிடம் பேசுகையில்,  அதிமுக ஆட்சியின் திட்டங்களை பாா்த்து திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் திருந்த வேண்டும். ஆனால் திமுகவின் குணமும், மனமும் மாறாது. தமிழகத்தில் செல்லாத நோட்டான முன்னாள் அமைச்சா் ராஜ கண்ணப்பன் திமுகவில் இருந்து விலகி அதிமுகவில் சோ்ந்தாா். பின்னா் அதிமுகவில் செல்லாமல் ஆகி மீண்டும் திமுகவில் இணைகிறாா். இதைக்கூட பெரிய நிகழ்ச்சியாக திமுக கருதுகிறது. அதிமுக கட்சிக்கும், ஆட்சிக்கும் ஏதாவது இடையூறு செய்துகொண்டே இருக்க வேண்டும் என்றே திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் செயல்படுகிறாா் என்று கூறினார்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com