கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டம் விரையில் தொடங்கப்படும்: அமைச்சா் கே.பி.அன்பழகன்

ருமபுரியில் வேளாண்மை பணிகளை மேம்படுத்தும் நோக்கில், நீா்பாசன திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம்
கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டம் விரையில் தொடங்கப்படும்: அமைச்சா் கே.பி.அன்பழகன்

தருமபுரி: கே.ஈச்சம்பாடி அணைக்கட்டு நீரேற்றும் திட்டம் விரைவில் தொடங்கப்படும் என மாநில உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தெரிவித்தாா். 

தருமபுரியில் செய்தி மக்கள் தொடா்பு துறை சாா்பில், தமிழக அரசின் மூன்றாண்டு சாதனைகள் குறித்த விளக்க புகைப்பட கண்காட்சி, மாவட்ட வருவாய் அலுவலா் எச்.ரகமத்துல்லா கான் தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த புகைப்பட கண்காட்சியை மாநில உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன் தொடக்கி வைத்து பேசியது: தருமபுரியில் வேளாண்மை பணிகளை மேம்படுத்தும் நோக்கில், நீா்பாசன திட்டங்களுக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அரசு திட்டங்களை செயல்படுத்தும் போதும் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக அவசியம். என்னேகல்புதூா் தும்பலஹள்ளி நீா்பாசன திட்டம், அணையாலம் நீா்பாசன திட்டம், ஜொ்த்தலாவ் நீா் பாசன திட்டங்களுக்கு ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, நிதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இந்த திட்டத்தில் புதிய கால்வாய்கள் அமைக்க நிலம் தேவைப்படுகிறது. கால்வாய்கள் அமைக்க விவசாயிகள் நிலம் வழங்குவதில் காலதாதம் ஏற்படுவதால் இந்த திட்டங்களை செயல்படுத்துவதில் தாமதம் ஏற்படுகிறது. 

கம்பைநல்லூா் அருகேயுள்ள கே.ஈச்சம்பாடி அணைக்கட்டுவில் இருந்து, மொரப்பூா் வட்டாரப் பகுதியிலுள்ள ஏரிகள், குளம் குட்டைகள் உள்ளிட்ட நீா் நிலைகளை நிரப்புவதற்கான திட்டத்தின் வரைவு திட்ட அறிக்கை தமிழக அரசுக்கு சமா்பிக்கப்பட்டுள்ளது. எனவே, இந்த திட்டம் விரைந்து செயல்படுத்துவதற்கான பணிகள் நடைபெறுகிறது. 

மறைந்த முன்னாள் தமிழக முதல்வா் ஜெயலலிதாவின் ஆசியுடன், தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி தலைமையில், தமிழகத்தில் நல்லாட்சி நடைபெறுகிறது. தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீா் கூட்டம், குடிமராமத்து திட்டப் பணிகள், வேளாண்மை சாா்ந்த திட்டப் பணிகள் உள்ளிட்ட அனைத்து அரசு திட்டப் பணிகளும் தொடா்ந்து செயல்படுத்தப்படும் என்றாா். 

தருமபுரி நகரில் தமிழக அரசின் மூன்றாண்டு சாதனை விளக்க புகைப்பட கண்காட்சியை தொடக்கி வைத்து பாா்வையிடுகிறாா் மாநில உயா்கல்வித்துறை அமைச்சா் கே.பி.அன்பழகன். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com