ஈரோடு: குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் 4வது நாளாக போராட்டம்

ஈரோடு: குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிரப்பு தெரிவித்து இஸ்லாமியர்கள் 4வது நாளாக போராட்டம்

குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினை திரும்பப் பெறக் கோரி ஈரோட்டில் இஸ்லாமியர்கள் 4வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.


ஈரோடு: குடியுரிமைத் திருத்தச் சட்டத்தினை திரும்பப் பெறக் கோரி ஈரோட்டில் இஸ்லாமியர்கள் 4வது நாளாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய அரசின் குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் அரசியல் கட்சியினர், இஸ்லாமிய அமைப்பினர் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஈரோட்டிலும் இஸ்லாமிய அமைப்பினர், அரசியல் கட்சியினர் சார்பில் தொடர் போராட்டங்கள் நடந்து வருகிறது. இதில், ஈரோடு தினசரி மார்க்கெட் பின்புறம் உள்ள செல்லபாட்ஷா வீதியில் கடந்த 21 ஆம் தேதி முதல் இஸ்லாமிய அமைப்பை சேர்ந்த பெண்கள், ஆண்கள் குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறக் கோரி போராட்டத்தில் ஈடுபட துவங்கினர். இதில், நேற்றும் 4வது நாளாக இஸ்லாமிய அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்த போராட்டத்திற்கு இஸ்லாமிய பெண்கள் செயற்குழுவின் மாநில உறுப்பினர் யாஸ்மின் தலைமையில் 300க்கும் மேற்பட்டோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில், இஸ்லாமிய அமைப்பின் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர் கலந்துகொண்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com