ஈரோட்டில் தேசிய எறிபந்து போட்டி: கர்நாடகா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது

ஈரோட்டில் நடந்த தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் கர்நாடக மாநில அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. 
ஈரோட்டில் தேசிய எறிபந்து போட்டி: கர்நாடகா அணி சாம்பியன் பட்டத்தை வென்றது


ஈரோடு: ஈரோட்டில் நடந்த தேசிய அளவிலான எறிபந்து போட்டியில் கர்நாடக மாநில அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. தமிழ்நாடு அணி 2-வது இடத்தை பிடித்தது.

ஈரோடு மாவட்ட எறிபந்து கழகம் சார்பில் தேசிய அளவிலான எறிபந்து போட்டி ஈரோடு சூர்யா என்ஜினீயரிங் கல்லூரியில் கடந்த 21 ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் தமிழ்நாடு, கர்நாடகா, தெலங்கானா, ஆந்திரம், கேரளம், புதுச்சேரி, மேற்கு வங்கம், சத்தீஸ்கர், புதுதில்லி, சண்டிகர், கோவா, மத்திய பிரதேசம், அரியானா ஆகிய 13 மாநிலங்களை சேர்ந்த அணிகள் பங்கேற்று விளையாடின. இதில் ஆண்கள் பிரிவில் 13 அணிகளும், பெண்கள் பிரிவில் 11 அணிகளும் என மொத்தம் 24 அணிகளை சேர்ந்த 350 வீரர்-வீராங்கனைகள் விளையாடினார்கள்.

லீக் மற்றும் நாக்-அவுட் முறையில் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஆண்கள் பிரிவில் கர்நாடக மாநில அணி முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்றது. தமிழ்நாடு அணி 2-வது இடத்தையும், சத்தீஸ்கர் மாநில அணி 3-வது இடத்தையும் பிடித்தன. இதேபோல் பெண்கள் பிரிவில் கர்நாடக மாநில அணி முதலிடத்தை பிடித்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com