காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டமும் - ஜெயலலிதாவும்

காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றதோடு, அந்த பகுதியில் நிலவிய குடிநீர்ப் பஞ்சத்தையும் போக்கியவர்  ஜெயலலிதா.
காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டமும் - ஜெயலலிதாவும்

காங்கயம் சட்டப் பேரவைத் தொகுதியில் நின்று வெற்றி பெற்றதோடு, அந்த பகுதியில் நிலவிய குடிநீர்ப் பஞ்சத்தையும் போக்கியவர் மறைந்த முதல்வர் ஜெயலலிதா.

1991-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப் பேரவைத் தேர்தலில் காங்கயம், பர்கூர் ஆகிய 2 தொகுதிகளில் அதிமுக பொதுச் செயலர் ஜெ.ஜெயலலிதா போட்டியிட்டார். 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்று, முதல்வராகப் பொறுப்பேற்றார். பின்னர், காங்கயம் தொகுதி உறுப்பினர் பதவியை ராஜிநாமா செய்து, ஆர்.எம்.வீரப்பனை போட்டியிட வைத்து, அவரையும் வெற்றி பெறவைத்தார்.

வாக்குறுதி அளித்தது போலவே, 1992-ஆம் ஆண்டு காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டம் கொண்டு வந்தார்.

மேலும், 2014-ஆம் ஆண்டு ரூ.94 கோடி திட்ட மதிப்பீட்டில் 2-ஆவது காவிரி கூட்டுக் குடிநீர்த் திட்டமும் ஜெயலலிதாவால் துவக்கப்பட்டு, அதற்கான பணிகள் முடிந்து குடி தண்ணீர் விநியோகம் செய்யப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com