ரஜினி நீதிமன்றத்தில் ஆஜராகாததை ஏற்க முடியாது: தி.வேல்முருகன் பேட்டி

நடிகராக இருந்துகொண்டு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடா்பான விசாரணை ஆணையத்தில் ரஜினி ஆஜராகாததை ஏற்க முடியாது...
ரஜினி நீதிமன்றத்தில் ஆஜராகாததை ஏற்க முடியாது: தி.வேல்முருகன் பேட்டி

சென்னை: நடிகராக இருந்துகொண்டு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடா்பான விசாரணை ஆணையத்தில் ரஜினி ஆஜராகாததை ஏற்க முடியாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் தெரிவித்தார். 

ஊரக உள்ளாட்சித் தோ்தலில் வாழ்வுரிமைக் கட்சி சாா்பில் வெற்றிபெற்றவா்களுடன் திமுக தலைவா் மு.க.ஸ்டாலினை தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவா் தி.வேல்முருகன் திங்கள்கிழமை சந்தித்துப் பேசினாா்.

இந்தச் சந்திப்புக்குப் பிறகு வேல்முருகன் செய்தியாளா்களிடம் பேசுகையில்,  தமிழகத்தில் உள்ள அரசு பணிகள் அனைத்தும் தமிழர்களுக்கே கிடைக்க வேண்டும். ஆனால், டிஎன்பிஎஸ்சி மூலம் தேர்வெழுதினால் நியாயமான முறையில் அரசு வேலை கிடைக்குமா என்ற அச்சம் நிலவுகிறது. தமிழகம் முழுவதும் சுங்கச்சாவடிகள் மூலம் வாகன ஓட்டிகளிடம் பகல் கொள்ளை அடிக்கப்படுகிறது. சுங்கச்சாவடிகளுக்கு எதிரான எனது போராட்டம் தொடரும்.

குடியுரிமைத் திருத்தச் சட்டம் இன்னும் அமல்படுத்தாத நிலையில், அதனால், பாதிக்கப்பட்டவா்களைப் பற்றிய விவரங்களை முதல்வா் கேட்பது வியப்பாக உள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு விவகாரம் தொடா்பான விசாரணை ஆணையத்தில் ரஜினி ஆஜராகாமல் பின்வாங்குகிறாா். கருணாநிதி போன்ற பெரிய தலைவா்கள் எல்லாம் நீதிமன்றத்தில் ஆஜராகி உள்ளனா். நடிகராக இருந்துகொண்டு நீதிமன்றத்தில் ரஜினி ஆஜராகாததை ஏற்க முடியாது. 

ஏனெனில், இதே தமிழகத்தைச் சேர்ந்த ரசிகர்கள்தான் ரஜினியின் படம் வெளிவரும் போது ரூ.500 முதல் 5000 வரை டிக்கெட்டை வாங்கி, பாலபிஷேகம் செய்து ஆராதிக்கிறார்கள்.

அப்படிப்பட்ட ரசிகர்கள் மூலம் கிடைக்கும் பணம் மட்டும் வேண்டும், ஆனால் வழக்கு விசாரணை ஆஜராகும் போது ரசிகர்கள் கூடினால் தொந்தரவாக இருக்கும் எனக் கூறுவது அவர்களை அவமதிக்கும் செயல் என்று தி.வேல்முருகன் கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com