மகாதாய் நதி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அனைத்து மாநிலங்களும் கட்டுப்பட வேண்டும்-மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி

மகாதாய் நதி நீர் பகிர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களும் கட்டுப்பட வேண்டும்
மகாதாய் நதி நீர் விவகாரம்: உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு அனைத்து மாநிலங்களும் கட்டுப்பட வேண்டும்-மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி

பனாஜி: மகாதாய் நதி நீர் பகிர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களும் கட்டுப்பட வேண்டும் என்று மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

மகாதாய் நதி நீர் பகிர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, மகாதாய் நதி நீர் பகிர்வு தகராறுகளுக்கான ஒற்றை தீர்ப்பாயத்தின் அறிக்கையையும் இறுதி முடிவையும் செயல்படுத்த மத்திய அரசு 'மகாதாய் நீர் மேலாண்மை ஆணையம்' என்ற அதிகார அமைப்பை அமைக்கப்படலாம் என்று தெரிகிறது.

இந்த நிலையில் பனாஜி அருகே வெள்ளிக்கிழமை மத்திய அமைச்சர் சுரேஷ் அங்காடி செய்தியாளர்களிடம் பேசுகையில், மகாதாய் நதி நீர் பகிர்வு விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுக்கு சம்பந்தப்பட்ட அனைத்து மாநிலங்களும் கட்டுப்பட வேண்டும். 

உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்பதால் ஒருவர் மகிழ்ச்சியாகவோ அல்லது மகிழ்ச்சியற்றவராகவோ இருப்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com