ரஜினிகாந்த்திற்கு சம்மன் அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படவில்லை: ஆணைய வழக்குரைஞர் பேட்டி

ரஜினிகாந்த்திற்கு சம்மன் அனுப்புவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை, மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இருக்கலாம் ...
ரஜினிகாந்த்திற்கு சம்மன் அனுப்புவது குறித்து முடிவு செய்யப்படவில்லை: ஆணைய வழக்குரைஞர் பேட்டி

ரஜினிகாந்த்திற்கு சம்மன் அனுப்புவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை, மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இருக்கலாம் என்று ஆணைய வழக்குரைஞர் வடிவேல் சேகர் கூறினார்.

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக கடந்த ஆண்டு மே 22-ம் தேதி நடைபெற்ற போராட்டத்தில் போலீஸார் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 13 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.

இது குறித்து ஓய்வுபெற்ற  நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணைக் குழு, தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடைபெற்ற துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பலதரப்பட்ட மக்கள் இடையே விசாரணையை நடத்தி வருகின்றனர். ஒருநபர் கமிஷனின் 19-வது கட்ட விசாரணை கடந்த 25 ஆம் தேதி துவங்கி இன்றுடன் நிறைவடைந்தது

இது குறித்து ஆணைய வழக்கறிஞர் வடிவேல் சேகர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,  துப்பாக்கிச் சூடு விசாரணை ஆணையத்தின் 19 வது கட்ட விசாரணையில் 31 சாட்சிகளுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் 15 பேர் ஆஜராகினர், இதில் 10 சாட்சிகள் அபிடவிட் தாக்கல் செய்தவர்களுக்கு மீண்டும் சம்மன் அனுப்பப்படும். இதில் 634 ஆவணங்கள் குறியீடு செய்யப்பட்டு உள்ளதாகவும், 20 வது கட்ட விசாரணை மார்ச் மாதம் துவங்கும் என தெரிவித்தார்.

மேலும் நடிகர் ரஜினிகாந்த்திற்கு சம்மன் அனுப்புவது குறித்து இன்னும் முடிவு செய்யப்படவில்லை, மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் இருக்கலாம் என்று தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com