ஊரக உள்ளாட்சித் தேர்தல்: செல்லாத தபால் வாக்குகள் அறிவிப்பு

தமிழகம் முழுவதும் இரு கட்டங்களாக பதிவான ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குகள் என்னும் பணி இன்று காலை முதல் தொடங்கி
ஊரக உள்ளாட்சித் தேர்தல்: செல்லாத தபால் வாக்குகள் அறிவிப்பு



தமிழகம் முழுவதும் இரு கட்டங்களாக பதிவான ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்குகள் என்னும் பணி இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், தமிழகம் முழுவதும் செல்லாத தபால் வாக்குகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி,  தருமபுரி ஏரியூர் ஒன்றியத்தில் பதிவான 135 வாக்குகளில் 85 வாக்குகள் செல்லாதவையும் என்றும், சிவகங்கை திருப்புவனம் ஒன்றியத்தில் பதிவான  60 வாக்குகளில் 58 வாக்குகளும், நாமக்கல் திருச்செங்கோடு ஒன்றியத்தில் பதிவான118 வாக்குகளில் 96 வாக்குகள் செல்லாதவை என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஈரோடு: ஈரோடு ஒன்றியத்துக்குள்பட்ட மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் திமுக முன்னிலை பெற்றுள்ளார். முதல் சுற்றில், மொத்தம் எண்ணப்பட்ட 2,370 வாக்குகளில், .திமுக 1,044, அதிமுக 1,025, அமமுக 60, நாம் தமிழர் 95, செல்லாதவை 143 வாக்குகள். 

தேனி:  தேனி மாவட்டம், சின்னமனூர் ஊராட்சி ஒன்றியக் குழு, 1வது வார்டு உறுப்பினர் (பொட்டிபுரம்) மொத்தம் எண்ணப்பட்ட 3,461 வாக்குகளில்  தி.மு.க 1,725(வெற்றி) அதிமுக 1,572, அமமுக 59,  செல்லாதவை 105 வாக்குள் ஆகும். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com