திருவாரூர் மையத்தில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது

 திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 10803 பேர் போட்டியிடுகின்றனர்.
திருவாரூர் மையத்தில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது


திருவாரூர்:  திருவாரூர் மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் 10803 பேர் போட்டியிடுகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் 2 கட்டங்களாக ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு, டிசம்பர் 9}ஆம் தேதி முதல் வேட்பு மனுக்கள் பெறப்பட்டு வந்தன. மாவட்டத்தில் மொத்தமுள்ள 10 ஊராட்சி ஒன்றியங்களில் 430 ஊராட்சித் தலைவர், 3180 ஊராட்சி வார்டு உறுப்பினர், 176 ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்கள், 18 மாவட்ட ஊராட்சி உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது. வேட்பு மனு தாக்கல் திங்கள்கிழமையுடன் நிறைவடைந்தது.

மாவட்ட ஊராட்சிக்கு 151 மனுக்களும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு 1306 மனுக்களும், ஊராட்சித் தலைவருக்கு 2645 மனுக்களும், ஊராட்சி வார்டு உறுப்பினர்களுக்கு 9340 மனுக்களும் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில், இந்த மனுக்கள் செவ்வாய்க்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. இதில் மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பதவிக்குத் தாக்கல் செய்யப்பட்டிருந்த 151 மனுக்களில் 11 மனுக்கள் நிராகரிக்கப்பட்டு, 140 மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டன. இதேபோல், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினர்களுக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்த 1306 மனுக்களில், 82 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஊராட்சித் தலைவருக்கு 2645 மனுக்களில் 40 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன. ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 9340 மனுக்களில் 78 மனுக்கள் நிராகரிக்கப்பட்டன.

இந்நிலையில் வேட்பு மனுக்கள் திரும்பப் பெறுவதற்கு கடைசி நாளான வியாழக்கிழமை, மாவட்ட ஊராட்சிக்கு 49 மனுக்களும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினருக்கு 494 மனுக்களும், ஊராட்சி தலைவருக்கு 950 மனுக்களும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 587 மனுக்களும் என மொத்தம் 2080 மனுக்கள் திரும்பப் பெறப்பட்டன. இறுதியாக, மாவட்ட ஊராட்சிக்கு 83 பேரும், ஊராட்சி ஒன்றியக்குழு உறுப்பினருக்கு 729 பேரும், ஊராட்சித் தலைவருக்கு 1655 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 8681 பேரும் என மொத்தம் 11,148 பேர் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது.

போட்டியின்றி தேர்வு....
இதனிடையே, ஊராட்சி வார்டு உறுப்பினராக 340 பேர் தேர்ந்தெடுக்கப்பட்டதால், ஊராட்சி வார்டு உறுப்பினருக்கு 8341 பேரும், ஊராட்சித் தலைவராக 5 பேரும் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்தையடுத்து, ஊராட்சி தலைவருக்கு 1650 பேர் போட்டியிடுகின்றனர். இதன்படி, திருவாரூர் மாவட்டத்தில் 10,803 பேர் போட்டியிடுகின்றனர். இதற்கான வாக்குப்பதிவு இரண்டு கட்டங்களாக நடைபெற்றது. பதிவான வாக்குகள் அடங்கிய பெட்டிகள், அந்தந்த ஒன்றியங்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்தன.

 இந்நிலையில் வாக்கு எண்ணும் பணி காலை 8 மணிக்கு தொடங்கியது. திருவாரூர் திரு.வி.க கல்லூரியில் வகை பிரித்தல் பணிக்கு பிறகு வாக்குகள் எண்ணும் பணி தொடர்கிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com