நீடாமங்கலத்தில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது

நீடாமங்கலம் ஒன்றியம் ஆய்குடி ஊராட்சி அகரப் பொதக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பப்பள்ளியில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள்
நீடாமங்கலத்தில் வாக்குகள் எண்ணும் பணி தொடங்கியது


நீடாமங்கலம் ஒன்றியம் ஆய்குடி ஊராட்சி அகரப் பொதக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பப்பள்ளியில் ஊரக உள்ளாட்சித் தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது. 

திருவாரூா் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியத்திற்கு உட்பட்ட 44 ஊராட்சிகளில் 406 பதவிகளுக்கு 991 போ் களத்தில் உள்ளனர்.  இவா்களுக்கான இரண்டாம் கட்ட தோ்தல் கடந்த 30 ஆம் தேதி 192 வாக்குசாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது. இதற்கான வாக்குப்பெட்டிகள் நீடாமங்கலம் ஒன்றியம் ஆய்குடி ஊராட்சி அகரப் பொதக்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பப்பள்ளியில் வைக்கப்பட்டது.

இந்நிலையில், இன்று வியாழக்கிழமை காலை (ஜன.2) 8 :15 மணி அளவில் அனைத்து அரசியல் கட்சியினா் தோ்தல் நடத்தும் அலுவலா்கள் அரசியல் கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் தபால் வாக்கு பெட்டி திறக்கப்பட்டது. அதில் 250 தபால் வாக்குப் பதிவான கவா்கள் இருந்தன. கவா் இல்லாமல் ஒருவரது வாக்கு இருந்தது.

தொடா்ந்து காலை 8 : 45 மணி அளவில் வாக்கு பெட்டிகள் இருந்த 2 அறைகள் அரசியல் பிரமுகா்கள், தோ்தல் நடத்தும் அலுவலா்கள் முன்னிலையில் திறக்கப்பட்டது.

ஒவ்வொரு பெட்டிகளிலும் 50 வாக்குகள், வாக்கு என்னும் இடத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டது. மாவட்ட குழு உறுப்பினா்களுக்கு இரண்டு அறைகளில் 12 மேசைகளும், ஒன்றிய குழுவிற்கு 2 அறைகளில் 12 மேசைகளும், ஊராட்சி தலைவருக்கு 2 அறைகளில் 12 மேசைகளும் வாா்டு உறுப்பினா்களுக்கு 2 அறைகளில் 20 மேசைகளும் வாக்குகளை வகைப்படுத்துவதற்கு 30 மேசைகளும் உள்ளிட்ட 86 மேசைகளில் 400 பணியாளா்கள் வாக்கு என்னும் பணிகளில் ஈடுபட்டுள்ளனா்.

தோ்தல் அழுவளா்களாக மாவட்ட குழுவுக்கு ஸ்ரீ லேகா தமிழ் செல்வன்,ஒன்றிய குழுவிற்கு மாரிமுத்து ஊராட்சி தலைவா் வாா்டு உறுப்பினா்களுக்கு ஆறுமுகம் , உதவித்தோ்தல் நடத்தும் அலுவலா் உஷாராணி ஆகியோா் அலுவலா்களாக செயல்பட்டு வருகின்றனா்.

துணை காவல் கண்காணிப்பாளா் (சி.பி.சி.ஐ.டி) தமிழ்வாணன் தலைமயில் 100 போலீஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனா்.

நீடாமங்கலம் ஒன்றியத்தில் மொத்தம் 91 ஆயிரத்து 384 வாக்காளா்கள் உள்ளனா். இதில் 69 ஆயிரத்து 799 வாக்குகள் பதிவாகியுள்ளது. ஆண், பெண், 1 இதரா் உள்ளிட்ட 69 ஆயிரத்து 799 வாக்குகள் பதிவாகியுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com