பெரம்பலூர்: வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம்

பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட அலுவலர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப்படாததாலும், செல்லாத வாக்குகள்
பெரம்பலூர்: வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பதில் காலதாமதம்

பெரம்பலூர்:  பெரம்பலூர் மாவட்டத்தில் வாக்கு எண்ணிக்கையில் ஈடுபட்ட அலுவலர்களுக்கு போதிய பயிற்சி அளிக்கப்படாததாலும், செல்லாத வாக்குகள் அதிகம் பதிவானதாலும் வாக்குகளை எண்ணி முடிவுகளை அறிவிப்பதில் மிகவும் காலதாமதம் ஏற்பட்டுள்ளது.

பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர் ஒன்றியத்துக்குள்பட்ட வாக்குகள் பெரம்பலூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், வேப்பூர் ஒன்றியத்துக்கான வாக்குகள் வேப்பூர் அரசு கலை அறிவியல் கல்லூரியிலும், ஆலத்தூர் ஒன்றியத்துக்கான வாக்குகள் பாடாலூர் அரசு மேல்நிலைப் பள்ளியிலும், வேப்பந்தட்டை ஒன்றியத்துக்குள்பட்ட வாக்குகள் உடும்பியம் ஈடன் கார்டன் மெட்ரிக் பள்ளியிலும் எண்ணப்பட்டது.

வாக்கு எண்ணும் பணியின் முதல் சுற்று முடிவு தெரிய சுமார் 2.30 மணி நேரமாகும் என தேர்தல் அலுவலர்கள் கணித்திருந்தனர். ஆனால், 5 மணிநேரம் ஆகியும் முதல் சுற்று முடிவை அறிவிக்க முடியவில்லை. வாக்கு எண்ணி முடிவுகளை அறிவிப்பதில் மிகவும் காலதாமதம் ஆகியது. வாக்குச் சீட்டில் வாக்காளர்கள் பலர் கைரேகை பதிவு செய்திருந்தனர். இன்னும் பலர் 2 சின்னங்களுக்கும் இடையே முத்திரை பதித்திருந்தனர். இதனால் இந்த வாக்குகள் செல்லாதவையாக அறிவிக்கப்பட்டன. இதுகுறித்து வேட்பாளர்களின் முகவர்க் சர்ச்சையை கிளப்பினர். இதனால் வாக்கு எண்ணிக்கையை முடித்து, முடிவு அறிவிப்பதில் மிகவும் காலதாமதம் ஏற்பட்டது.

இதுகுறித்து வேட்பாளர்களின் முகவர்கள் சிலர் தெரிவித்ததாவது; 8 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்குச் சீட்டு முறையில் தமிழகத்தில் இப்போதுதான் வாக்குப் பதிவு நடைபெற்றது. பலர் வாக்குச் சீட்டில் வாக்கு அளிக்கும் நடைமுறையை மறந்துவிட்டனர். தவிர கடந்த 8 ஆண்டுகளில் வாக்குச் சீட்டில் முதல்முறையாக வாக்களிக்கும் வாக்காளர்கள் பலர் குழப்பமடைந்து கைரேகை மற்றும் முத்திரைகளை தவறாகவும் பதிவு செய்திருந்தனர்.

வாக்குச் சீட்டு முறையில் வாக்களிக்கும் நடைமுறை குறித்து மாநில தேர்தல் ஆணையம் வாக்காளர்களுக்கு போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தவில்லை. இதனால் வாக்காளர்கள் பலர் மிகச் சரியான முறையில் வாக்குகளை பதிவு செய்ய முடியாமல் திணறினர். வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்ட அலுவலர்களுக்கு விரைவாக வாக்குச் சீட்டுகளை பிரித்து, எண்ணி முடிவுகளை அறிவிக்க போதிய பயிற்சி அளிக்கப்படவில்லை என தெரிகிறது. வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்ட பலர் மிகவும் மெத்தனமாக செயல்பட்டனர். இதனால் வாக்குச் சீட்டுகளை பிரித்து எண்ணி முடிவுகளை அறிவிப்பதில் மிகவும் தாமதம் ஏற்பட்டது என்றனர்.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com