மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன

ஊரக உள்ளாட்சித் தோ்தலில்  மதுரை மாவட்டத்தில் இரு கட்டங்களாக பதிவான வாக்குகள் 13 மையங்களில் எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.  
மதுரை மாவட்டத்தில் 13 மையங்களில் வாக்குகள் எண்ணப்படுகின்றன

ஊரக உள்ளாட்சித் தோ்தலில்  மதுரை மாவட்டத்தில் இரு கட்டங்களாக பதிவான வாக்குகள் 13 மையங்களில் எண்ணும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.  

வாக்குச்சீட்டுகள் முதலில் வகை பிரிக்கப்பட்டுகிறது. 4 வண்ண வாக்குச்சீட்டுகள் பிரிக்கப்பட்டு 50 எண்ணிக்கை கொண்ட கட்டுகளாக கட்டப்படுகிறது. வகை பிரித்தல் பணியில் ஒரு மேஜைக்கு தலா ஒரு மேற்பார்வையாளர் மற்றும் 2 அலுவலர்கள் இருப்பர்.

மாவட்ட ஊராட்சி வார்டு, ஊராட்சி ஒன்றிய வார்டு, ஊராட்சி தலைவர், ஊராட்சி வார்டு உறுப்பினர் என வகை பிரிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் தனித்தனி அறைகளில் எண்ணப்படுகிறது.

ஒரே நேரத்தில் வாக்கு எண்ணும் மையத்துக்குள் செல்ல முயன்றதால் தள்ளுமுள்ளு...

வாக்கு எண்ணிக்கையில் ஒரு மேஜைக்கு தலா ஒரு மேற்பார்வையாளர் 3 வாக்கு எண்ணும் அலுவலர்கள் இருப்பபர்.

மா.ஊ.வா.உறுப்பினருக்கு 173,  ஊ.ஒ.வார்டு உறுப்பினருக்கு 173, ஊராட்சி தலைவருக்கு 175, வார்டு உறுப்பினர்களுக்கு 275 , வாக்குகள் வகை பிரித்தல் செய்ய 386 என மொத்தம் 1182 மேஜைகள் அமைக்கப்பட்டுள்ளன.

வாக்குகள் எண்ணும் பணியில் மொத்தம் 3965 பேர் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com