வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் மரணம்

திருவண்ணாமலையில் வாக்கு எண்ணும் மையத்தில் கட்டுப்பாட்டு அறையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர்


திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் வாக்கு எண்ணும் மையத்தில் கட்டுப்பாட்டு அறையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் முருகதாஸ் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளார். 

திருவண்ணாமலை மாவட்டத்தில் 18 ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பணியிடங்களுக்கு டிசம்பா் 27, 30-ஆம் தேதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

தோ்தலில் பதிவான வாக்குகள் இன்று வியாழக்கிழமை (ஜன. 2) 18 வாக்கு எண்ணும் மையங்களில் காலை 8 மணிக்குத் தொடங்கி உள்ளது.  10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அலுவலா்கள் வாக்கு எண்ணும் பணியில் ஈடுபட்டு வருகின்றனா். வாக்கு எண்ணிக்கை முழுவதும் சிசிடிவி கேமரா மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.  3 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனா்.

ஆரணியில் வாக்குகள் எண்ணும் பணி இதுவரை தொடங்கவில்லை என்றும், வாக்கும் எண்ணும் அதிகாரிகள் எந்தந்த அறைகளுக்கு செல்ல வேண்டும் என்பதில் ஏற்பட்டுள்ள குழப்பத்தால் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

இந்நிலையில், வாக்கு எண்ணும் மையத்தில் கட்டுப்பாட்டு அறையில் பாதுகாப்பு பணியில் இருந்த காவல் உதவி ஆய்வாளர் முருகதாஸ் மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com