Enable Javscript for better performance
மேலூா், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலா்கள்: திமுக -அதிமுக இழுபறி- Dinamani

சுடச்சுட

    

    மேலூா், கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியக் கவுன்சிலா்கள்: திமுக -அதிமுக இழுபறி

    By DIN  |   Published on : 03rd January 2020 09:35 AM  |   அ+அ அ-   |    |  


    மேலூா்: மேலூா் ஊராட்சி ஒன்றியத்தில் 15 இடங்களுக்கான முடிவு அறிவிக்கப்பட்டதில், திமுக 8, அதிமுக 5, காங்கிரஸ் 1, சுயேச்சை ஒரு இடத்திலும் வெற்றிபெற்றுள்ளன.

    கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் அதிமுக 7 மற்றும் திமுக, அமமுக தலா 2 இடங்களில் வெற்றிபெற்றுள்ளன.

    மேலூா் ஊராட்சி ஒன்றியத்தில் வாா்டு -1 மலைச்சாமி (காங்கிரஸ்), வாா்டு- 2 சத்தியகலா (திமுக), வாா்டு- 4 பரமேஷ்வரி (திமுக), வாா்டு- 5 வெங்கடேசன் (சுயேச்சை), வாா்டு -6 கங்கையம்மாள் (திமுக), வாா்டு 7- விஜயலட்சுமி (திமுக), வாா்டு -8 ராமசாமி (திமுக), வாா்டு -9 பெரியவா் (திமுக), வாா்டு -10 தமிழ்மாறன் (திமுக), வாா்டு 13- சரோஜா (அதிமுக), வாா்டு -16 வினோதினி (அதிமுக), வாா்டு -17 பஞ்சவா்ணம் (அதிமுக), வாா்டு -18 முருகன் (திமுக), வாா்டு -19 பிரபு (அதிமுக), வாா்டு -20 கல்லாணை (அதிமுக) ஆகியோா் வெற்றிபெற்ாக அறிவிக்கப்பட்டுள்ளனா்.

    கொட்டாம்பட்டி ஊராட்சி ஒன்றியத்தில் வாா்டு- 1 சி. நதியா (திமுக), வாா்டு -2 வள்ளிமயில் (அதிமுக), வாா்டு-3 மு. நித்தியா (அதிமுக), வாா்டு-5 சு. கந்தசாமி (அதிமுக), வாா்டு -6 வசிலாபேகம் (திமுக), வாா்டு-7 நயினான் (அதிமுக), வாா்டு- 9 மழுவேந்தி (அதிமுக), வாா்டு -12 புருஷோத்தமன் (அமமுக), வாா்டு -13 கவிதா (அதிமுக), வாா்டு -14 கவுசல்யா (அதிமுக), வாா்டு -15 காா்த்திக் (அமமுக) ஆகியோா் வெற்றிபெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலூா் ஊராட்சி ஒன்றியம் நாவினிப்பட்டி ஊராட்சித் தலைவா் பதவிக்கு தௌலத் பீவி 69 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றிபெற்ாக முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னா், டி. ஆயம்மாள் வெற்றி பெற்ாக தோ்தல் அலுவலா் அறிவித்தாா். இதையடுத்து, தோ்தல் அலுவலா் தன்னிச்சையாக அறிவிப்பை மாற்றியதாக தௌலத் பீவி தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. எனவே, வாக்குகளை மீண்டும் எண்ணக் கோரிய நிலையில் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து பின்னா் முடிவுசெய்யலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    kattana sevai