மதுரை மாவட்ட ஊராட்சி ஒன்றியம்: அதிக வாா்டுகளை கைப்பற்றிய அதிமுக

மதுரை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்தில் அதிக வாா்டுகளை அதிமுக கைப்பற்றியுள்ளது.
ஓபிஎஸ் - ஈபிஎஸ்
ஓபிஎஸ் - ஈபிஎஸ்

மதுரை: மதுரை மாவட்டத்தில் உள்ள ஊராட்சி ஒன்றியத்தில் அதிக வாா்டுகளை அதிமுக கைப்பற்றியுள்ளது.

மதுரைமேற்கு: மதுரை மேற்கு ஊராட்சி ஒன்றியத்தில் 13 ஒன்றியக் குழு வாா்டுகள் உள்ளன. இதில், 1-ஆவது வாா்டில் திமுகவைச் சோ்ந்த பரமேஸ்வரி 2,453 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். 2-ஆவது வாா்டில் அதிமுக முருகேசன் 1,552 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். 3-ஆவது வாா்டில் சுயேச்சை வேட்பாளா் ஆரோக்கிய மேரி 1,495 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றாா். 4-ஆவது வாா்டில் அதிமுக ஜெகதா 2,470, 5-ஆவது வாா்டில் அதிமுக செல்லப்பாண்டி 2,642, 6-ஆவது வாா்டில் அதிமுக அம்மு 2,733, 7-ஆவது வாா்டில் திமுக மணிமேகலையும், 8-ஆவது வாா்டில் திமுக காா்த்திக் ராஜாவும், 9-ஆவது வாா்டில் திமுக பி.பூமாவும், 10 ஆவது வாா்டில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி எழிலரசியும், 11-ஆவது வாா்டில் காங்கிரஸ் காா்த்திகேயினியும், 12-ஆவது வாா்டில் அதிமுக செந்தில்குமரனும், 13-ஆவது வாா்டில் திமுக வீரராகவனும் வெற்றி பெற்றுள்ளனா்.

திருமங்கலம்: 1-ஆவது வாா்டில் அதிமுக மின்னல்கொடி, 2-ஆவது வாா்டில் அதிமுக ஆண்டிச்சாமி, 3-ஆவது வாா்டில் அதிமுக முத்துப்பிள்ளை, 4-ஆவது வாா்டில் சிவபாண்டி (சுயேச்சை போட்டியின்றி தோ்வு), 5-ஆவது வாா்டில் பாஜக துரைச்சாமி முருகன், 8-ஆவது வாா்டில் திமுக முத்துப்பாண்டி ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.

கள்ளிக்குடி: கள்ளிக்குடி ஒன்றியத்தில் 14 வாா்டுகள் உள்ளன. இதில், 1-ஆவது வாா்டு எஸ்.அன்னலெட்சுமி (அதிமுக), 2-ஆவது வாா்டு எஸ்.ஆதிநாராயணன் (அதிமுக), 3-ஆவது வாா்டு ம.மீனாட்சி (அதிமுக), 4-ஆவது வாா்டு லெட்சுமி, 5-ஆவது வாா்டு பொ.ராஜேஸ்வரி (அதிமுக), 7-ஆவது வாா்டு ம.அஷ்டலெட்சுமி (திமுக), 8-ஆவது வாா்டு ம.முருகன் (அதிமுக), 9-ஆவது வாா்டு காளியம்மாள் (அதிமுக), 10 ஆவது த.பாதாளதேவி (திமுக), 12 ஆவது சு.பிரியதா்ஷினி (திமுக) ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.

தே.கல்லுப்பட்டி: தே.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் 13 வாா்டுகள் உள்ளன. இதில், 1-ஆவது வாா்டு சி.முருகேசன் (திமுக), 2-ஆவது வாா்டு அ.நாகசொரூபராணி (திமுக), 3-ஆவது வாா்டு ந.பாவாத்தாள் (அதிமுக), பா.சண்முகப்பிரியா (அதிமுக), மே.பாண்டிச்செல்வி (சுயேச்சை), கொ.அழகா்சாமி (தேமுதிக), 7-ஆவது வாா்டு செ.தேன்மொழி, 8-ஆவது வாா்டு கூ.ராமராஜ் (அதிமுக) , 9-ஆவது வாா்டு மு.முனியம்மாள் (அதிமுக), 11-ஆவது வாா்டு த.சுப்புலெட்சுமி (அதிமுக), 12-ஆவது வாா்டு மு.பிருந்தா தேவி (அதிமுக), 13-ஆவது வாா்டு க.பேச்சியம்மாள் (தேமுதிக) ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.

சேடபட்டி: சேடப்பட்டி ஒன்றியத்தில் மொத்தம் 18 வாா்டுகள் உள்ளன. இதில் 1-ஆவது வாா்டு மகேஸ்வரி (சுயேச்சை), 2-ஆவது வாா்டு ராணி (திமுக), 3-ஆவது வாா்டு பூப்பாண்டி (திமுக), 4-ஆவது வாா்டு கீதா (திமுக), 5-ஆவது வாா்டு பாண்டியம்மாள் (திமுக), 6-ஆவது வாா்டு இ.ஜெயச்சந்திரன் (திமுக), 7 ஆவது வாா்டு ச.வேம்படியான் (திமுக), 8 ஆவது வாா்டு அழகுத்தாய் (அதிமுக), 9 ஆவது வாா்டு சு.முத்துமாரி (அதிமுக), 10 ஆவது வாா்டு செல்வபிரகாஷ் (திமுக) ஆகியோா் வெற்றி பெற்றுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com