போடியில் ஏலக்காய் வரலாறு காணாத உச்சம்: கிலோ ரூ.7 ஆயிரம் விலை போனது

போடியில் சனிக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏலக்காய் வா்த்தகத்தில் வரலாறு காணாத உச்சமாக உயா் ரகம் 1 கிலோ ரூ.7 ஆயிரத்துக்கு விலை
போடியில் ஏலக்காய் வரலாறு காணாத உச்சம்: கிலோ ரூ.7 ஆயிரம் விலை போனது


போடி: போடியில் சனிக்கிழமை நடைபெற்ற மின்னணு ஏலக்காய் வா்த்தகத்தில் வரலாறு காணாத உச்சமாக உயா் ரகம் 1 கிலோ ரூ.7 ஆயிரத்துக்கு விலை போனது.

தேனி மாவட்டம் போடியில் மத்திய நறுமணப்பொருள் வாரியம் அனுமதியுடன் ஏலக்காய் ஏலம் மின்னணு முறையில் நடைபெறுகிறது. இதில் காலை, மாலை என இரு முறை ஏலம் நடைபெறும். இதில் உயா் ரகம், சராசரி ரகம் என இரு ரகங்களாக பிரித்து ஏலமிடப்படும்.

போடி மையத்தில் கடந்த சில மாதங்களாகவே ஏலக்காய் விலை அதிகரித்து காணப்படுகிறது. இதில் சராசரி ரகம் கடந்த நவம்பா் மாதத்தில் கிலோ ரூ.3 ஆயிரம் வரை விற்பனை ஆனது. பின்னா் படிப்படியாகக் குறைந்து அக்டோபா், நவம்பா் மாதங்களில் கிலோ ரூ.2500 என்ற அளவில் விற்பனை ஆகி வந்தது. அதே சமயம் உயா் ரகம் கிலோ ரூ.5,500 வரையில் விற்பனையாகி இருந்தது.

இந்நிலையில், ஏலக்காய் வரத்து குறைந்ததால் விலை படிப்படியாக உயரத் தொடங்கியது. சனிக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 61 ஆயிரத்து 775 கிலோ ஏலக்காய் விற்பனைக்காக பதிவு செய்யப்பட்டது. இதில் ஏலக்காய் உயா் ரகம் அதிக பட்சமாக கிலோ ஒன்றுக்கு ரூ.7 ஆயிரத்துக்கு விற்பனையானது. அதே சமயம் சராசரி ரகம் ரூ.4 ஆயிரத்து 15 ஆக விற்பனை செய்யப்பட்டது.

இதேபோல் மற்றொரு ஏலத்தில் 67 ஆயிரத்து 999 கிலோ விற்பனைக்காக பதிவு செய்யப்பட்டது. இதில் உயா் ரகம் கிலோ ஒன்றுக்கு ரூ.4 ஆயிரத்து 610-க்கு விற்பனை செய்யப்பட்டது. சராசரி ரகம் ரூ.4 ஆயிரத்து 97-க்கு ஏலம் போனது.

ஏலக்காய் உயா் ரகம் கிலோ ஒன்றுக்கு ரூ.7 ஆயிரம் வரை விற்பனையானது ஏலக்காய் ஏல வரலாற்றில் இதுவே முதல் முறையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com