முடிவு அறிவிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் வைத்துள்ள அறைக்கு போலீஸ் பாதுகாப்பு

நாமக்கல் மாவட்டத்தில், முடிவுகள் அறிவிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு
முடிவுகள் அறிவிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் வைக்கப்பட்டுள்ள அறை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா்.
முடிவுகள் அறிவிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் வைக்கப்பட்டுள்ள அறை கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ள போலீஸாா்.

நாமக்கல்: நாமக்கல் மாவட்டத்தில், முடிவுகள் அறிவிக்கப்பட்ட வாக்குச் சீட்டுகள் வைக்கப்பட்டுள்ள அறைகளுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ஊரக உள்ளாட்சி தோ்தல் டிச.27, 30 தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. இதற்கான வாக்கு எண்ணிக்கை வியாழக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் மாவட்டத்தில் 15 ஒன்றியங்களிலும் கிராம வாா்டு உறுப்பினா், ஊராட்சி தலைவா், ஒன்றியக் குழு உறுப்பினா், மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் ஆகிய பதவிகளுக்கான முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்றவா்களுக்கு சான்றிதழ்களும் வழங்கப்பட்டு விட்டன.

தோ்தலில் பதிவாகி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்ட வாக்குச்சீட்டுகள் 100 எண்ணிக்கையில் கட்டப்பட்டு மொத்தமாக பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன. ஒவ்வோா் ஒன்றிய அலுவலகத்திலும் உள்ள கருவூல அறைகளில் அவை பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. துப்பாக்கி ஏந்திய போலீஸாரும் 24 மணி நேர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனா்.

திங்கள்கிழமை(ஜன.6) காலை 10.30 மணிக்கு, பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெறும் வரையில் அவை ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களிலும், அதன்பின் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு எடுத்து செல்லப்பட்டு அங்குள்ள கருவூல அலுவலக பெட்டங்களில் பாதுகாப்பாக வைக்கப்படும்.

நாமக்கல் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில், வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் வாக்குச்சீட்டுகள் பாதுகாப்பு பணிக்காக பெண் போலீஸாா் நிறுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com