கன்னியாஸ்திரிக்கு முத்தமிட்டுத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் போப்

கன்னியாஸ்திரி ஒருவருக்கு முத்தமிட்டதன் மூலம் போப் பிரான்சிஸ் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.
கன்னியாஸ்திரிக்கு முத்தமிட்டுத் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கும் போப்


வாடிகன்: கன்னியாஸ்திரி ஒருவருக்கு முத்தமிட்டதன் மூலம் போப் பிரான்சிஸ் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

கடந்த சில நாள்களுக்கு முன் புத்தாண்டையொட்டி, வாடிகன் நகரின் புனித பீட்டர் சதுக்கத்தில் போப் பிரான்சிஸ் தலைமையில் சிறப்பு பிரார்த்தனைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக வந்த போப், பார்வையாளர்களை நோக்கிக் கையசைத்தபடி வந்தார். அப்போது கூட்டத்தில் நின்றுகொண்டிருந்த பெண் ஒருவர், போப் கையைப் பிடித்து இழுத்தார். இதனால் நிலைகுலைந்துபோன போப், அந்த பெண்ணின் கையை இரு தடவை உதறிவிட்டார். இந்த காட்சி, சமூக வலைத்தளங்களில் பரவி கடும் விமர்சனங்களைச் சந்தித்தது. 

இதையடுத்து போப் பிரான்சிஸ், சில நேரங்களில் தானும் பொறுமை இழந்துவிடுவதாகவும், ஒரு மோசமான முன்னுதாரணத்துக்குத் தாம் எடுத்துக்காட்டாகிவிட்டதற்காக வருத்தம் தெரிவிப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார். 

இந்த நிலையில், வாடிகன் நகரில் உள்ள அதே புனித பீட்டர் சதுக்கத்தில் நடந்த வாராந்திர பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்துகொண்ட போப் பிரான்சிஸ்ஸிடம், பார்வையாளர் வரிசையில் நின்றுகொண்டிருந்த கன்னியாஸ்திரி ஒருவர் எனக்கு முத்தம் தருவீர்களா எனக் கேட்டார். இதைச் சற்றும் எதிர்பார்க்காத போப், நான் முத்தம் தருகிறேன். நீ அமைதியாக இருக்க வேண்டும். கடிக்கக் கூடாது எனக் கிண்டலாக கூறி, அவரின் வலது கன்னத்தில் முத்தமிட்டார்.

இந்தக் காட்சி, தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.  

சிலநேரங்களில் தானும் பொறுமை இழந்துவிடுவதாகவும் கூறித் தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்த போப் பிரான்சிஸ், தற்போது கன்னியாஸ்திரி ஒருவருக்கு முத்தமிட்ட விவகாரத்தில் மீண்டும் சர்ச்சையில் சிக்கியுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com