Enable Javscript for better performance
அம்பாசமுத்திரம் வட்டார சிவன் கோயில்களில் திருவாதிரை திருவிழா, ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜை- Dinamani

சுடச்சுட

    

    அம்பாசமுத்திரம் வட்டார சிவன் கோயில்களில் திருவாதிரை திருவிழா, ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜை

    By DIN  |   Published on : 10th January 2020 07:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடையம் அருள்மிகு கல்யாணி அம்மன் உடனுறை வில்வவனநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு நடைபெற்ற தாண்டவ தீபாராதனை. 

    கடையம் அருள்மிகு கல்யாணி அம்மன் உடனுறை வில்வவனநாதர் கோயிலில் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நடராஜருக்கு நடைபெற்ற தாண்டவ தீபாராதனை. 

     

    அம்பாசமுத்திரம்: திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம், பாபநாசம், கல்லிடைக்குறிச்சி மற்றும் தென்காசி மாவட்டம் கடையம், சிவசைலம் உள்ளிட்ட இடங்களில் உள்ள சிவன் கோயில்களில் திருவாதிரை ஆருத்ருரா தரிசனம் நடைபெற்றது.

    பாபநாசம், அருள்மிகு பாபநாசசாமி திருக்கோயிலில், ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு ஜன. 1 புதன்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. தொடர்ந்து ஜன. 7 செவ்வாய்க்கிழமை மாலை நடராஜருக்கு சிகப்பு சாத்தி அலங்காரம், ஜன. 8 புதன் காலை  நடராஜபெருமானுக்கு வெள்ளை சாத்தி அலங்காரம்,  மாலை நடராஜபெருமானுக்கு பச்சை சாத்தி அலங்காரம் நடைபெற்றது. ஜன. 10 வெள்ளிக்கிழமை காலை ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு அதிகாலை 3 மணிக்கு நடராஜ பெருமானுக்கு ஸ்நபனம், ஹோமம், கும்ப பூஜையும் காலை 4 மணிக்கு கந்த தைலம், மா பொடி. மஞ்சள், திரவியம், நெல்லிப் பொடி, பால், தயிர், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன், திரவியம், சந்தணம், இளநீர் உட்பட 36 வகையான சிறப்பு அபிஷேகங்களும் சிறப்பு தீபாராதனைகளும் நடைபெற்றது. காலை 5.30 மணிக்கு ஆருத்ரா தரிசனம், கோபூஜை, தாண்டவத் தீபாராதனை நடைபெற்றது.

    அனைத்துக் கோயில்களிலும் ஆருத்ரா தரிசனத்தை முன்னிட்டு நூற்றுக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். மேலும் அம்பாசமுத்திரம் அருள்மிகு காசிநாத சுவாமி திருக்கோவில், அம்மையப்பர் கோயில், கல்லிடைக்குறிச்சி சிதம்பரேஸ்வரர் கோயில், கடையம் வில்வவனநாதர் கோயில், சிவசைலம், சிவசைலநாதர் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் ஆருத்ரா தரிசன சிறப்பு பூஜை நடைபெற்றது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai