ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளி ரவிச்சந்திரன் 10 நாட்கள் பரோலில் விடுவிப்பு
By DIN | Published On : 10th January 2020 10:40 AM | Last Updated : 10th January 2020 10:59 AM | அ+அ அ- |

முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலைக் குற்றவாளிகளில் ஒருவரான அருப்புக்கோட்டையைச் சேர்ந்த ரவிச்சந்திரன் இன்று வெள்ளிக்கிழமை (ஜன.10) 10 நாட்கள் (ஜன.25 வரை) பரோலில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
மதுரை மத்திய சிறையில் இருந்த அவரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அருப்புக்கோட்டையிலுள்ள அவரது சொந்த வீட்டிற்கு இன்று வெள்ளிக் கிழமை காலை சுமார் 9.20 மணிக்கு அழைத்து வரப்பட்டார்.
அருப்புக்கோட்டை காவல்துணைக்கண் காணிப்பாளர் வெங்கடேசன், நகர் காவல் ஆய்வாளர் பாலமுருகன் உள்ளிட்டோரின் பாதுகாப்பு ஏற்பாடுகளின் படி 2 ஷிப்டுகளில் மொத்தம் 120 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.