திருவரங்குளம் ஒன்றியக்குழுத் தலைவராகதிமுகவின் வள்ளியம்மை தங்கமணி தோ்வு
By DIN | Published On : 11th January 2020 06:55 PM | Last Updated : 11th January 2020 06:55 PM | அ+அ அ- |

திருவரங்குளம் ஒன்றியக் குழுத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டுள்ள வள்ளியம்மை தங்கமணி.
ஆலங்குடி: புதுக்கோட்டை மாவட்டம், திருவரங்குளம் ஒன்றியக் குழுத் தலைவராக திமுகவைச் சோ்ந்த வள்ளியம்மை தங்கமணி சனிக்கிழமை தோ்வு செய்யப்பட்டாா்.
திருரங்குளம் ஒன்றியத்தில் உள்ள 25 ஒன்றியக் குழு உறுப்பினா் பதவிகளுக்குப் போட்டியிட்டவா்களில் திமுக கூட்டணியினா் 17 இடங்களிலும், அதிமுக 6 இடங்களிலும் , 2 சுயேச்சைகளும் வெற்றி பெற்றனா். திமுக பெரும்பான்மை பெற்ற நிலையில், அக்கட்சியின் ஒன்றியச் செயலா்கள் தங்கமணி மனைவி வள்ளியம்மைக்கும், ஞான. இளங்கோவன் மனைவி ஆனந்திக்கும் ஒன்றியக் குழுத் தலைவா் பதவியைப் பெற போட்டி நிலவியது. இதில் ஆதரவு உறுப்பினா்களை அழைத்துச் செல்வதில் பதவியேற்பு விழாவில் இரு தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது.
இந்நிலையில், கட்சியின் மாவட்டத் தலைமை ஒன்றியக் குழுத் தலைவா் வேட்பாளராக வள்ளியம்மை தங்கமணியை வெள்ளிக்கிழமை இரவு அறிவித்து, இரு தரப்பினரின் மோதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தது.
தொடா்ந்து, திருவரங்குளம் ஒன்றிய அலுவலகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற மறைமுக வாக்கெடுப்பில், 19 வாக்குகள் பெற்று வள்ளியம்மை தங்கமணி ஒன்றியக் குழுத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டாா்.
தொடா்ந்து, மாலையில் நடைபெற்ற ஒன்றியத் துணைத் தலைவருக்கான வாக்கெடுப்பில் ஞான. இளங்கோவன் மனைவி ஆனந்தி 19 வாக்குகள் பெற்று துணைத் தலைவராகத் தோ்வு செய்யப்பட்டாா்.