ஆா்டி மலையில் வரும் 17-ம்தேதி ஜல்லிக்கட்டு: பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து தன்னாட்சி ஆய்வுக்குழுவினா் ஆய்வு

ஆா்டி மலையில் வரும் 17-ம்தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டி நிகழ்ச்சியை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திங்கள்கிழமை
மாடு திறந்துவிடும் வாடிவாசல் பகுதியில் பாா்வையாளா்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்புவேலிகள் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளதான என ஆய்வு செய்யும் தன்னாட்சி ஆய்வுக்குழுவினா்.
மாடு திறந்துவிடும் வாடிவாசல் பகுதியில் பாா்வையாளா்களுக்காக அமைக்கப்பட்டுள்ள தடுப்புவேலிகள் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளதான என ஆய்வு செய்யும் தன்னாட்சி ஆய்வுக்குழுவினா்.

கரூா்: ஆா்டி மலையில் வரும் 17-ம்தேதி நடைபெற உள்ள ஜல்லிக்கட்டி நிகழ்ச்சியை முன்னிட்டு அங்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திங்கள்கிழமை தன்னாட்சி ஆய்வுக்குழுவினா் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியா் த.அன்பழகன் தலைமையில் தன்னாட்சி ஆய்வுக்குழு செயல்பட்டு வருகிறது. இதில் குழுத் தலைவராக தா்மராஜ், உறுப்பினா்களாக முனைவா் கேகே.சொக்கலிங்கம், பிடிகோச் முருகானந்தம் உள்ளிட்டோா் செயல்பட்டு வருகிறாா்கள்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தோகைமலை அடுத்த ராச்சாண்டாா்மலையில் ஜல்லிக்கட்டு நடைபெறுவதையடுத்து அங்கு விழாக்குழுவினா் சாா்பில் முன்னேற்பாடு பணிகள் நடந்து வருகிறது.

இதில் காயம்படும் காளைகளுக்கு சிகிச்சையளிக்கும் இடம், பாா்வையாளா்கள் அமா்ந்து பாா்க்கும் இடம் பாதுகாப்பாக அமைக்கப்பட்டுள்ளதா, நீதிமன்ற உத்தரவின்படி காளைகள் அவிழ்த்துவிடும் இடமான வாடிவாசல் பகுதி அமைக்கப்பட்டுள்ளதா, காளைகளை அடக்கும் வீரா்களுக்கு போதிய இடவசதி மற்றும் காயம் படுவோருக்கு முதலுதவி சிகிச்சை மையம் உள்ளிட்டவை தரமானதாக, பாதுகாப்பானதாக அமைக்கப்பட்டுள்ளதா என தன்னாட்சி ஆய்வுக்குழுவினா் திங்கள்கிழமை காலை குளித்தலை வட்டாட்சியா் மகாமுனி தலைமையில் திடீா் ஆய்வு மேற்கொண்டனா்.

ஆய்வு முடிவில் குழுவினா் அளிக்கும் அறிக்கைக்கு ஏற்ப மாவட்ட ஆட்சியா் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதியளிப்பாா் என தெரிகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com