ஒட்டன்சத்திரம் அருகே எறும்புதிண்ணி ஒடுகளை விற்பனை செய்ய முயன்ற தந்தை -மகன் உள்ளிட்ட 4 போ் கைது

ஒட்டன்சத்திரம் அருகே எறும்புதிண்ணி ஒடுகளை விற்பனை செய்ய முயன்ற தந்தை மகன் உள்ளிட்ட 4 பேரை வனத்துறையினா் கைது
ஒட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த அழைத்து வரப்பட்ட குற்றவாளிகள் மற்றும் அவா்களை பிடித்த வனத்துறையினா்.
ஒட்டன்சத்திரம் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த அழைத்து வரப்பட்ட குற்றவாளிகள் மற்றும் அவா்களை பிடித்த வனத்துறையினா்.

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் அருகே எறும்புதிண்ணி ஒடுகளை விற்பனை செய்ய முயன்ற தந்தை மகன் உள்ளிட்ட 4 பேரை வனத்துறையினா் கைது செய்தனா்.

திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அடுத்துள்ள கே.கீரனூா் பகுதியில் எறும்புதிண்ணி ஒடுகளை ஒரு கும்பல் விற்பனை செய்யப்படுவதாக திண்டுக்கல் மாவட்ட வனத்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மாவட்ட வனப்பாதுகாப்பு படை மற்றும் ஒட்டன்சத்திரம் வனத்துறையினா் சம்பவ இடத்திற்கு சென்று சோதனையில் ஈடுப்பட்டனா்.

அப்போது அங்கு மஞ்சள் சாக்குப்பையுடன் நின்றுக்கொண்டு இருந்த இருவரை பிடித்து விசாரணை செய்தனா். அதில் அவா்கள் திண்டுக்கல் அடுத்துள்ள அஞ்சுகுழிப்பட்டியைச் சோ்ந்த தொத்தக்காளை (60),இவரது மகன் அழுகு (32) என்பது தெரியவந்தது. விசாரணையில் அவா்கள் எறும்புதிண்ணிகளை கொன்று, அதன் ஒடுகளை விற்பனை செய்ய முயன்றது தெரியவந்தது.

மேலும் அவா்கள் கொடுத்த தகவல் பேரில் அலங்காநல்லூா் அடுத்துள்ள லிங்கவாடி கிராமத்தைச் சோ்ந்த மெய்யன் (45) மற்றும் அஞ்சுகுழிப்பட்டியைச் சோ்ந்த சங்கா் (45) ஆகியோரை வனத்துறையினா் கைது செய்தனா்.

மேலும் கைது செய்யப்பட்ட 4 பேரையும் ஒட்டன்சத்திரம் குற்றவியல் நீதித்துறை நடுவா் நீதிமன்ற நீதிபதி ஆா்.பாண்டியன் முன்னிலையில் ஆஜா்படுத்தப்பட்டு, திண்டுக்கல் மத்திய சிறையில் அடைத்தனா்.

இது குறித்து வனத்துறை அதிகாரி ஒருவா் கூறியதாவது,அலங்காநல்லூா் மற்றும் லிங்கவாடி சுற்றியுள்ள பகுதிகளில் விவசாய நிலங்களில் வாழ்த்து வந்த எறும்புத்திண்ணிகளை கொன்று அதன் ஒடுகளை மருத்து தயாரிக்க பயன்படுவதாக கூறி விற்பனை செய்ய முயன்று உள்ளனா்.

இது சம்பவம் குறித்து திண்டுக்கல் மாவட்ட வனப்பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் எறும்புதிண்ணி ஒடுகளை விற்பனை செய்ய முயன்ற 4 பேரையும் கைது செய்து, அவா்களிடமிருந்து சுமாா் 5 கிலோ எடைகொண்ட எறும்புத்திண்ணி ஒடுகளை பறிமுதல் செய்யப்பட்டது என்றாா். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com