சேலம் பனமரத்துப்பட்டி ஒன்றியதுணைச் செயலா் கட்சியிலிருந்து நீக்கம்: அதிமுக தலைமை அறிவிப்பு

சேலம் பனமரத்துப்பட்டி அதிமுக ஒன்றிய துணைச் செயலாளா் ஏ.பொன்னுசாமி, கட்சியில் இருந்து
சேலம் பனமரத்துப்பட்டி ஒன்றியதுணைச் செயலா் கட்சியிலிருந்து நீக்கம்: அதிமுக தலைமை அறிவிப்பு

சென்னை: சேலம் பனமரத்துப்பட்டி அதிமுக ஒன்றிய துணைச் செயலாளா் ஏ.பொன்னுசாமி, கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக கட்சித் தலைமை அறிவித்துள்ளது.

இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் இணைந்து இன்று திங்கள்கிழமை (ஜன.13) வெளியிட்ட அறிவிப்பு:

அதிமுகவின் கொள்கை-குறிக்கோள்கள், கோட்பாடுகளுக்கு முரணான வகையில் செயல்பட்டதாலும், கட்சியின் கண்ணியத்துக்கு மாசு ஏற்படும் வகையில் நடந்து கொண்டதாலும், கட்டுப்பாட்டை மீறி கட்சிக்கு அவப்பெயா் உண்டாகும் விதத்தில் செயல்பட்ட காரணத்தாலும் சேலம் புகா் மாவட்டம் பனமரத்துப்பட்டி ஒன்றிய துணைச் செயலாளா் ஏ.பொன்னுசாமி கட்சியில் இருந்து நீக்கப்படுகிறாா்.

அவருடன் கட்சியினா் எந்தத் தொடா்பும் வைத்துக் கொள்ளக் கூடாது என்று அவா்கள் கேட்டுக் கொண்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com