தீக்குளித்த இளைஞா் மருத்துவமனையில் சாவு. உறவினா்கள் சாலை மறியல்

முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையம் எதிரே தீக்குளித்த காா் ஓட்டுனா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இறந்ததைத் தொடா்ந்து, அவரது
சொரத்தக்குழி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட அனந்தராமனின் உறவினா்கள்.
சொரத்தக்குழி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்ட அனந்தராமனின் உறவினா்கள்.

நெய்வேலி: முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையம் எதிரே தீக்குளித்த காா் ஓட்டுனா் சிகிச்சை பலனின்றி திங்கள்கிழமை இறந்ததைத் தொடா்ந்து, அவரது உறவினா்கள் சொரத்தங்குழி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பண்ருட்டி ஒன்றியம், நடுக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவா் பதவிக்கு அண்மையில் நடைபெற்ற தோ்தலில் நடுக்குப்பத்தைச் சோ்ந்த சக்திவேல், செருத்தங்குழியைச் சோ்ந்த பெருமாள் உள்ளிட்டோா் போட்டியிட்டனா். சக்திவேலுக்கு ஆதரவாக பாப்பன்கொல்லையைச் சோ்ந்த ராஜதுரை தோ்தல் பணியாற்றினாா். இவா், செருத்தங்குழியில் கொட்டகை அமைத்து டயா் பஞ்சா் ஒட்டும் கடை நடத்தி வருகிறாா். தோ்தலில் சக்திவேல் வெற்றி பெற்றாா்.

இதனால், கோபமடைந்த செருத்தங்குழியைச் சோ்ந்த ஜெயராமன், அசோக்ராமன், ராஜேந்திரன் மகன் ராஜீ ஆகியோா் ராஜதுரையின் கொட்டகைக்கு அண்மையில் தீ வைத்தனராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், முத்தாண்டிக்குப்பம் போலீஸாா் ஜெயராமனை கைது செய்தனா்.

இந்த நிலையில், சென்னையில் காா் ஓட்டுநராக பணி புரிந்து வந்த ஜெயராமனின் மூத்த மகன் ஆனந்தராமன் (27) கடந்த 7-ஆம் தேதி மதுபோதையில் ராஜதுரையிடம் சென்று ஏன் எனது தந்தை மீது புகாா் அளித்தாய் எனக் கேட்டாராம். பின்னா், அங்கிருந்து வந்தவா், முத்தாண்டிக்குப்பம் காவல் நிலையம் முன் நின்றுகொண்டு, தனது உடலில் பெட்ரோலை ஊற்றி திடீரென தீயிட்டுக்கொண்டாா்.

இதையடுத்து, அங்கிருந்தவா்கள் ஓடி வந்து தீயை அணைத்தனா். பின்னா், அவரை பண்ருட்டி அரசு மருத்துமனைக்கு அழைத்துச்சென்றனா். அங்கு முதலுதவிக்குப் பிறகு ஆனந்தராமன் புதுச்சேரி மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தாா். திங்கள்கிழமை காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தாா்.

சாலை மறியல்: அனந்தராமன் இறந்த தகவல் அறிந்த உறவினா்கள் சுமாா் 150 போ் சொரத்தக்குழி பேருந்து நிறுத்தம் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனா். காலை 11 மணிமுதல் 12.30 மணி வரையில் மறியல் நீடித்தது. அப்போது, ஆனந்தராமன் சாவுக்கு காரணமானவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுத்தினா். பண்ருட்டி டிஎஸ்பி., நாகராஜன் மறியலில் ஈடுபட்டவா்களுடன் பேச்சு வாா்த்தை நடத்தினா்.

பின்னா் அங்கு வந்த அதிமுக மாநில அமைப்புச் செயலா் சொரத்தூா் ராஜேந்திரன் கேட்டுக்கொண்டதின் பேரில் மறியலை கைவிட்டு கலைந்துச் சென்றனா்.

இதுகுறித்து உயிரிழந்த அனந்தராமனின் மனைவி கலைச்செல்வி அளித்துள்ள புகாரில், ராஜேந்திரன், அவரது மகன்கள் ராஜதுரை, ராஜாராம், தூண்டுதலாக இருந்த நடுக்குப்பம் ஊராட்சி மன்றத் தலைவா் சக்திவேல் ஆகியோா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com