உலகின் மிகச்சிறிய கின்னஸ் சாதனையாளர் காலமானார்

நேபாளத்தை சேர்ந்த உலகின் மிகச்சிறிய மனிதரும், கின்னஸ் சாதனையாளருமான ககேந்திர தபா மகர்(27) நிமோனியா காய்ச்சலால்
உலகின் மிகச் சிறிய மனிதரான ககேந்திர தாபா மாகர், அக்டோபர் 2010 இல் நேபாளத்தின் போகாராவில் மச்சபூக்ரே மலையின் பின்னணியில் தனது கின்னஸ் சாதனை சான்றிதழுடன்.
உலகின் மிகச் சிறிய மனிதரான ககேந்திர தாபா மாகர், அக்டோபர் 2010 இல் நேபாளத்தின் போகாராவில் மச்சபூக்ரே மலையின் பின்னணியில் தனது கின்னஸ் சாதனை சான்றிதழுடன்.


 
காத்மாண்டு: நேபாளத்தை சேர்ந்த உலகின் மிகச்சிறிய மனிதரும், கின்னஸ் சாதனையாளருமான ககேந்திர தபா மகர்(27) நிமோனியா காய்ச்சலால் மருத்துவமனையில் நேற்று வெள்ளிக்கிழமை(ஜன.17) காலமானார். 

உலகின் மிகச்சிறிய மனிதர் என்ற கின்னஸ் சாதனையை தன் வசம் வைத்திருந்தவர் ககேந்திர தபா மகர் பெற்றோருடன் வசித்து வந்தார். திடீரென அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளதை அடுத்து, காத்மாண்டுவிலிருந்து 200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள போகாராவில் உள்ள ஒரு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நிமோனியோ காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ள ககேந்திர தபா மகருக்கு இதயமும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். இதையடுத்து தொடர்ந்து மருத்துவ சிகிச்சை பெற்று வந்தார்.  

இந்நிலையில், நேற்று வெள்ளிக்கிழமை (ஜன.17) மாலை 3 மணிக்கு சிகிச்சை பலனின்றி மருத்துவமனையிலேயே உயிரிழந்தாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். 

காலமான ககேந்திர தபா மகர் 1992 ஆம்  ஆண்டு அக்டோர் 14 ஆம் தேதி பிறந்தார். 2010 ஆம் ஆண்டு தனது 18வது வயதில் உலகின் மிகச் சிறிய மனிதராக அறிவிக்கப்பட்டார். அவரை விட சற்று சிறியதான ஒரு சான்றிதழ் வைத்திருப்பதை புகைப்படமாக எடுத்துக்கொண்டார். 

உலகின் மிகிச் சிறய மனிதராக அறிவிக்கப்பட்டபோது 67.08 செ.மீட்டர் உயரமும், 6 கிலோ எடையும் கொண்டவராக இருந்தார். 

இருப்பினும், கடந்த ஆண்டு , 54.6 செ.மீட்டர் உயரமும், 5 கிலோ எடையும் கொண்ட பிலிபைன்ஸை சேர்ந்த ஜூன்ரேவிடம் உலகின் மிகச் சிறிய மனிதர் என்ற பட்டத்தை மகர் இழந்தார்.

உலகின் மிகச் சிறிய மனிதரான ககேந்திர தபா மகர் 12 நாடுகளுக்கு மேல் பயணம் செய்துள்ளார். ஐரோப்பா மற்றும் அமெரிக்க தொலைக்காட்சிகளில் பிரபலமாக பேசப்பட்டவர்.  இந்தியாவைச் சேர்ந்த மிகச் சிறிய பெண்ணான ஜோதி அம்ஜ் உள்பட, உலகெங்கிலும் உள்ள மற்ற சிறிய மனிதர்களை சந்தித்துள்ளார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com