Enable Javscript for better performance
ரஜினியை திராவிட கழகத்தினர் மிரட்ட நினைக்கிறார்கள்: எச்.ராஜா- Dinamani

உடனுக்கு உடன் செய்திகள்

    ரஜினியை திராவிட கழகத்தினர் மிரட்ட நினைக்கிறார்கள்: எச்.ராஜா

    By DIN  |   Published On : 19th January 2020 05:27 PM  |   Last Updated : 19th January 2020 05:27 PM  |  அ+அ அ-  |  

    h.raja announces a protest

    ஹெச்.ராஜா


    சென்னை: காவல் நிலையத்தில் புகார் அளிப்பதன் மூலம் ரஜினியை திராவிட கழகத்தினர் மிரட்ட நினைக்கிறார்கள். ஆனால் அவர் எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டார் என பாஜக தேசிய செயலர் ஹெச்.ராஜா தெரிவித்துள்ளார். 

    சமீபத்தில் சென்னை, கலைவாணர் அரங்கில் நடந்த, துக்ளக் 50-வது ஆண்டு விழாவில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரஜினிகாந்த், முரசொலி வைத்திருந்தால் திமுக காரன் என்று சொல்வார்கள். துக்ளக் வைத்திருந்தால் அறிவாளி என்று சொல்வார்கள், பெரியார் தலைமையில் ராமர், சீதை உருவங்கள் நிர்வாணமாக ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு செருப்பு மாலை போடப்பட்டது என்று ரஜினி பேசினார். இதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    பெரியார் குறித்து அவர் தெரிவித்த கருத்துக்கு பலரும் ஆட்சேபனை தெரிவித்தனர். தொடர்ந்து, பல்வேறு மாவட்டங்களில் திராவிட கழகத்தினர் சார்பில், ரஜினிகாந்த் மீது 6 மாவட்டத்தில் காவல் நிலையங்களி புகார் அளிக்கப்பட்டு வருகிறது. 

    இந்நிலையில், இதுகுறித்து இன்று சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாஜக தேசிய செயலாளர் ஹெச்.ராஜா, ரஜினிகாந்த் தவறாக எதுவும் கூறவில்லை. அவர் மேலோட்டமாக ஒரு சம்பத்தை குறிப்பிட்டதற்கே, காவல் நிலையத்தில் புகார் அளிப்பதன் மூலம் அவரை திராவிட கழகத்தினர் மிரட்ட நினைக்கிறார்கள். ஆனால் அவர் எந்த சலசலப்புக்கும் அஞ்சமாட்டார் என்று கூறியுள்ளார். 


    உங்கள் கருத்துகள்

    Disclaimer : We respect your thoughts and views! But we need to be judicious while moderating your comments. All the comments will be moderated by the dinamani.com editorial. Abstain from posting comments that are obscene, defamatory or inflammatory, and do not indulge in personal attacks. Try to avoid outside hyperlinks inside the comment. Help us delete comments that do not follow these guidelines.

    The views expressed in comments published on dinamani.com are those of the comment writers alone. They do not represent the views or opinions of dinamani.com or its staff, nor do they represent the views or opinions of The New Indian Express Group, or any entity of, or affiliated with, The New Indian Express Group. dinamani.com reserves the right to take any or all comments down at any time.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் பகிரப்பட்டவை
    kattana sevai
    flipboard facebook twitter whatsapp