நாட்டில் உண்மையான பிரச்னை வேலையின்மை, மக்கள்தொகை அல்ல: ஓவைஸி

நாட்டில் தற்போது நிலவும் உண்மையான பிரச்னை வேலையின்மை தான், மக்கள்தொகை அல்ல என்று இரு குழந்தைகள் கொள்கைகள் குறித்து கருத்து
நாட்டில் உண்மையான பிரச்னை வேலையின்மை, மக்கள்தொகை அல்ல: ஓவைஸி


நாட்டில் தற்போது நிலவும் உண்மையான பிரச்னை வேலையின்மை தான், மக்கள்தொகை அல்ல என்று இரு குழந்தைகள் கொள்கைகள் குறித்து கருத்து தெரிவித்திருந்த ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத்துக்கு அசாதுதீன் ஓவைஸி பதிலளித்துள்ளார். 

உத்தரப் பிரதேசம் மாநிலம், மொராதாபாத்தில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில், இந்தியா ஒரு வளரும் நாடு. இங்கு கட்டுப்பாடற்ற மக்கள்தொகை வளர்ச்சி நாட்டின் வளர்ச்சிக்கு நல்லதல்ல.  நாட்டில் அதிகரித்து வரும் மக்கள்தொகை நெருக்கடியைக் கட்டுப்படுத்த ஒரு புதிய சட்டத்தை வலியுறுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ், அதிகபட்சம் 'இரு குழந்தைகள்' கொள்கை வடிவத்தில் கொண்டு வரும் எந்தவொரு சட்டத்தையும் ஆதரிக்கும். இது காலத்தின் தேவை என்று நாங்கள் கருதுகிறோம், இருப்பினும், இது தொடர்பாக மத்திய அரசுதான் முடிவு எடுக்க வேண்டும். இந்தச் சட்டம் எந்தவொரு குறிப்பிட்ட மதத்துடனும் எந்த தொடர்பும் இல்லாமல், அனைவருக்கும் பொருந்தும் விதமாக இருக்க வேண்டும். 2 குழந்தைகள் கொள்கையை வலியுறுத்துவதே எங்களுடைய அடுத்த திட்டம் என பேசிய ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேசியிருந்தார். 

இந்த நிலையில் மோகன் பாகவத்தின் "இரு குழந்தைகள் கொள்கை" குறித்த கருத்தை எதிர்த்து, ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஓவைஸி விமர்சித்துள்ளார். 

“உங்களுக்கு வெட்கமாக இல்லையா! எனக்கு இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர், பல பாஜக தலைவர்களுக்கு இரண்டுக்கும் மேற்பட்ட குழந்தைகள் உள்ளனர். ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து முஸ்லிம் மக்களைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று பேசி வருகிறது. இந்த நாட்டின் உண்மையான பிரச்னை வேலையின்மை தான், மக்கள்தொகை அல்ல, ”என்று கூறினார். 

மேலும்,  இந்தியாவில் 60 சதவீத மக்கள் 40 வயதுக்கு குறைவானவர்கள். அவர்களுக்கு கடந்த ஐந்து ஆண்டில் உங்களால் யாருக்கும் வேலை வழங்க முடியவில்லை. அதன் எதிரொலியாக ‘இரு குழந்தைகள்’ கொள்கையை கொண்டுவர  வலியுறுத்தி வரும் ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத், வேலையின்மை பிரச்னைகளால் 2018 இல் ஒரு நாளைக்கு 36 இளைஞர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். அதற்கு என்ன பதில் சொல்லபோகிறீர்கள்? என்று கேள்வி எழுப்பிய ஓவைசி,  நாட்டின் சரியான வளர்ச்சியை உறுதி செய்துவிட்டு இரு குழந்தைகள் கொள்கைக்கான புதிய சட்டத்தை கொண்டு வரப்பட வேண்டும் என்று கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com