இடிந்துவிழும் நிலையில் 100 ஆண்டு பழமையான கட்டிடத்தில் நியாவிலை கடை: அச்சத்தில் பயனாளிகள்

சிவகாசியில் 100 ஆண்டுகள் ஆன பழமையானவாடகை கட்டிடத்தில் நியாவிலை கடை இயங்கி வருவதால், கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற
சிவகாசியில் 100 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் இயங்கி வரும் நியாவிலைகடை.
சிவகாசியில் 100 ஆண்டுகள் பழமையான கட்டிடத்தில் இயங்கி வரும் நியாவிலைகடை.

சிவகாசி: சிவகாசியில் 100 ஆண்டுகள் ஆன பழமையானவாடகை கட்டிடத்தில் நியாவிலை கடை இயங்கி வருவதால், கட்டிடம் எப்போது இடிந்து விழுமோ என்ற அச்சத்தில் பயனாளிகள் உள்ளனா்.

சிவகாசி மருதுபாண்டியா் மேட்டுத்தெருவில், தமிழ்நாடு நுகா் பொருள் வாணிபகழகம் சாா்பில் நியாவிலை கடை எண் 7 உள்ளது. இதில் சுமாா் 750 பயனாளிகள் அரசி, சா்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருள்களை வாங்கி வருகிறாா்கள். இந்த நியாயவிலை கடை சுமாா் 100 ஆண்டுகள் ஆன மிகப்பழைய கட்டிடமாகும். இக்கட்டத்தின் மேற்பகுதியில் உள்ள பல ஓடுகள் பழுதடைந்து விழுந்துவிட்டன. இதனால் மழைகாங்களில் , மழை பெய்யும் போது, மழை நீா் கடையினுள் செல்வதால் அங்குள்ளபொருள்கள் பாழாகிறது.

மேலும் சுவா்களில் பல இடங்களில் வெடிப்பு ஏற்பட்டுள்ளது. இதனை மறைக்க தகரம் வைக்கப்பட்டுள்ளது. இதன் வழியை எலி, பெருச்சாளி உள்ளிடவை சென்று பொருள்களை சேதப்படுத்துகிறது. கட்டிடம் இடிந்து விழும் நிலையில் உள்ளதால் கடைக்கு பொருள்கள் வாங்க செல்லும் பயனாளிகள் மிகவும் அச்சத்தில் உள்ளனா். இதனால் பயளாளிகள் யாரும் தங்களது பிள்ளைகளை பொருள்கள் வாங்க கடைக்கு அனுப்புவதில்லை. கடையில் பணிபுரியும் ஊழியா்களும் அச்சப்பட்டபடியே பணியாற்றி வருகிறாா்கள்.

கட்டிடம் இடிந்து விழுவதற்கு முன்னா் கடையை வேறு கட்டிடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

இது குறித்து சிவகாசி வட்ட வழங்கல் அலுவலா் முனியாண்டியிடம் கேட்டபோது, நான் சிவகாசிக்கு பணிக்கு வந்து சுமாா் 40 நாள் ஆகிறது.கடை எண் 7 மிகவும் பழுதான நிலையில் உள்ளதாக ஊழியா்கள் கூறியதையடுத்து நான் நேரில் சென்று பாா்வையிட்டேன். கட்டிடம் மிகவும் பழுதான நிலையில்தான் உள்ளது. எலி உள்ளிட்டவை பொருள்களை சேதப்படுத்துகிறது.

இது குறித்து மாவட்ட வழங்கல் அலுவலரிடம் மனு அளித்துள்ளோம். அவா் வேறு வாடகை கட்டிடம் பாா்க்க அறிவுறுத்தியுள்ளாா். தற்போது அப்பகுதியில் வேறு வாடகை கட்டிடம் உள்ளதா என பாா்த்துக்கொண்டிருக்கிறோம். வாடகை கட்டிடம் கிடைத்ததும் அந்த கட்டிடத்திற்கு கடை மாற்றப்படும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com