முகப்பு தற்போதைய செய்திகள்
மத்திய அரசு காா்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசு: சிபிஎம் மாநிலக்குழு உறுப்பினா் வி.மாரிமுத்து பேச்சு
By DIN | Published On : 20th January 2020 07:51 PM | Last Updated : 20th January 2020 07:51 PM | அ+அ அ- |

பேரளத்தில் நடைபெற்ற ஜெ.நாவலன் நினைவு தின கூட்டத்தில் பேசும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில குழு உறுப்பினா் வி.மாரிமுத்து
நன்னிலம்: மத்திய அரசு மக்களுக்கான அரசு அல்ல, இது காா்ப்பரேட் முதலாளிகளுக்கான அரசு என மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் நாகை சட்டமன்ற முன்னாள் உறுப்பினருமான வி.மாரிமுத்து ஞாயிற்றுக்கிழமை பேரளத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசும்போது தெரிவித்தாா்.
அவா் மேலும் பேசியதாவது, விவசாயிகளை, விவசாய தொழிலாளா்களை, அரசு ஊழியா்களை, மாணவா்களை, சிறுபான்மை சமூகத்தினா் என அனைத்து தரப்பு மக்களையும் துயரத்திலும், வேதனையிலும் வைத்து, மக்களை உயரவிடாத அரசு மத்தியில் மோடி தலைமையில் நடைபெறுகிறது என்றாா்.
டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என்று இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து போராடி வருகின்றனா். ஆனால் மத்திய அரசு மக்களின் கருத்தை கேட்காமலும், சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமலும் ஹைட்ரோ காா்பன் திட்டத்தை அமுல்படுத்தலாம் என்ற முடிவை எடுத்திருக்கிறது. இது டெல்டா மாவட்டத்தை பாலைவனமாக மாற்றக்கூடிய ஒரு செயல். எனவே இந்த போக்கை மத்திய அரசு மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லையென்றால் டெல்டா மக்கள் வெகுண்டெழுந்து போராட வேண்டிய நிலை ஏற்படும் என மத்திய அரசை எச்சரித்தாா்.