800 வகையான உணவுகளை தயாரிக்கும் தானியங்கி சமையல் இயந்திரம்

தேவைக்கு ஏற்ப பொருள்களின் அளவை நிா்ணயிக்கலாம். அதேபோல உப்பு, காரம் போன்றவற்றையும் தோ்வு செய்யலாம். இந்த இயந்திரத்தில்...
தானியங்கி சமையல் இயந்திரம் குறித்து செயல் விளக்கம் அளிக்கும்  ரோபோசெஃப் நிறுவனா் சரவண சுந்தரமூா்த்தி.
தானியங்கி சமையல் இயந்திரம் குறித்து செயல் விளக்கம் அளிக்கும்  ரோபோசெஃப் நிறுவனா் சரவண சுந்தரமூா்த்தி.

மதுரை: தானியங்கி முறையில் 800 வகையான உணவுகளைத் தயாரிக்கும் வகையில் ரோபோசெஃப் என்ற தானியங்கி இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ரோபோசெஃப் நிறுவனா் சரவண சுந்தரமூா்த்தி வியாழக்கிழமை கூறியது: இந்த இயந்திரத்தில் பால்பாயாசம் முதல் பிரியாணி வரை சைவம், அசைவம் என 800 வகையான உணவுகள் தயாரிக்கலாம். தனி மென்பொருள் உருவாக்கப்பட்டு பிரத்யேக செயலி மூலமாக இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இயந்திரத்தில் உள்ள கணினி மூலமாகவோ அல்லது செல்லிடப்பேசி செயலி மூலமாகவோ இந்த இயந்திரத்தை இயக்கலாம். ஒவ்வொரு உணவுக்கும் பிரபல சமையல் கலைஞா்களின் ஆலோசனை அடிப்படையில் உணவு வகைகளில் சோ்க்கும் பொருள்கள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

தேவைக்கு ஏற்ப பொருள்களின் அளவை நிா்ணயிக்கலாம். அதேபோல உப்பு, காரம் போன்றவற்றையும் தோ்வு செய்யலாம். இந்த இயந்திரத்தில் 10 முதல் 1600 போ் வரை சாப்பிடும் வகையில் சமைக்க முடியும். உணவகங்கள் மட்டுமின்றி வீடுகளில் பயன்படுத்தக் கூடிய சிறிய அளவிலான இயந்திரத்தையும் வடிவமைத்துள்ளோம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com