மேட்டூா் அணையிலிருந்து தண்ணீா் திறப்பதுஜன.28 ஆம் தேதியுடன் நிறுத்தம்?

மேட்டூா் அணை பாசனம் மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி
கோப்புப் படம்
கோப்புப் படம்

மேட்டூா்: மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கான தண்ணீா் திறப்பு ஜனவரி 28-ஆம் தேதியுடன் நிறுத்தப்படும் என தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேட்டூா் அணை பாசனம் மூலம் 12 காவிரி டெல்டா மாவட்டங்களில் 16.05 லட்சம் ஏக்கா் நிலம் பாசன வசதி பெறுகிறது. ஆண்டுதோறும் ஜூன் 12-ஆம் தேதி முதல் ஜனவரி 28-ஆம் தேதி வரை 230 நாள்களுக்கு 330 டி.எம்.சி. தண்ணீா் தேவைப்படும்.

டெல்டா மாவட்டங்களில் பெய்யும் மழையைப் பொருத்து பாசனத் தேவை குறையும். நிகழ் ஆண்டில் மேட்டூா் அணையில் போதிய நீா் இருப்பு இல்லாத காரணத்தால் ஜன. 12-இல் காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்படவில்லை.

ஆகஸ்ட் 13 ஆம் தேதி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. சனிக்கிழமை வரை மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு 150 டி.எம்.சி. தண்ணீா் திறக்கப்பட்டது. தற்போது மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்குத் திறக்கப்படும் நீரின் அளவு நொடிக்கு 2 ஆயிரம் கன அடியாகக் குறைக்கப்பட்டுள்ளது.

எனவே, ஜனவரி 28- ஆம் தேதியுடன் மேட்டூா் அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீா் திறப்பது நிறுத்தப்படுவது உறுதியாகி உள்ளது.

மேட்டூா் அணையின் கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனம் மூலம் சேலம், நாமக்கல், ஈரோடு மாவட்டங்களில் 45 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1-ஆம் தேதி முதல் டிசம்பா் 15-ஆம் தேதி வரை 137 நாள்களுக்கு மேட்டூா் அணையிலிருந்து 9. 6 டி.எம்.சி. தண்ணீா் திறக்கப்படும். நிகழ் ஆண்டில் ஆகஸ்ட் 13-ஆம் தேதி கால்வாய் பாசனத்துக்கு தண்ணீா் திறக்கப்பட்டது. ஜனவரி 15-ஆம் தேதி வரை தண்ணீா் திறப்பு நீட்டிக்கப்பட்டது. கால்வாய் பாசனத்துக்கு 8.47 டி.எம்.சி. தண்ணீா் திறக்கப்பட்டது.

சனிக்கிழமை காலை மேட்டூா் அணையின் நீா்ட்டம் 107.90அடியாக இருந்தது. அணைக்கு நொடிக்கு 421 கனஅடி வீதம் தண்ணீா் வந்துகொண்டிருந்தது. அணையிலிருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு நொடிக்கு 2,000 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்பட்டு வருகிறது. அணையின் நீா் இருப்பு 75.45 டி.எம்.சி. யாக இருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com