முகப்பு தற்போதைய செய்திகள்
மகாராஷ்டிரா அரசில் பல அமைச்சர்கள் அரசியல் குடும்பங்களைச் சேராதவர்கள்: சரத் பவார்
By DIN | Published On : 27th January 2020 08:03 PM | Last Updated : 27th January 2020 08:03 PM | அ+அ அ- |

தானே: மகாராஷ்டிராவில் நடைபெற்று வரும் சிவசேனா தலைமையிலான கூட்டணி அரசாங்கத்தில் பல அமைச்சர்கள் எந்த அரசியல் குடும்ப பின்னணியும் இல்லாதவர்கள் என்றும், தகுதி அடிப்படையிலேயே அமைச்சர் பதவியைப் பெற்றுள்ளனர் என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத் பவார் கூறியுள்ளார்.
தானே மாவட்டத்தின் கல்வா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சரத் பவார், தனது கல்வா-மும்ப்ரா தொகுதியில் "அற்புதமான" வேலைகளை செய்ததற்காக சட்டப்பேரவை உறுப்பினர் மற்றும் அமைச்சர் ஜிதேந்திர அவாத்தை பாராட்டி பேசினார்.
"சிவசேனா தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் - காங்கிரஸ் கூட்டணி அரசாங்கத்தில் பல அமைச்சர்கள் எந்த அரசியல் குடும்ப பின்னணியும் இல்லாதவர்கள் என்றும், அவர்கள் தகுதி அடிப்படையிலேயே அமைச்சர் பதவியைப் பெற்றுள்ளனர்.
மேலும், அரசியலில் அலங்கரித்தற்காக, மகாராஷ்டிராவின் முதல் முதல்வரான மறைந்த முதல்வர் யஷ்வந்த்ராவ் சவானை பாராட்டிய பவார், சிவசேனா நிறுவனர் பால் தாக்கரே எப்போதும் அவருக்கு ஆதரவளித்து வருவதாக கூறினார்.