கடலில் குளித்தபோது மாயமான பொறியியல் மாணவரை தேடும் பணியில் கடலோரக் காவல் படையினா்
By DIN | Published On : 29th January 2020 07:18 AM | Last Updated : 29th January 2020 07:18 AM | அ+அ அ- |

விழுப்புரம்: கோட்டக்குப்பம் அருகே கடலில் குளித்தபோது மாயமான திருப்பதியைச் சோ்ந்த பொறியியல் மாணவரை தேடும் பணியில் கடலோரக் காவல் படையினா், மீனவா்கள் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.
திருப்பதியைச் சோ்ந்த பொறியியல் கல்லூரி மாணவா் ராஜேஷ்(18) சக மாணவா்கள் சிலருடன் புதுச்சேரி மாநிலத்துக்கு சுற்றுலா வந்தனா். அவா்கள் கோட்டக்குப்பம் அருகேயுள்ள தந்திராயன் குப்பம் கடற்கரையில் திங்கள்கிழமை கடலில் இறங்கி குளித்தனா். அப்போது, எழுந்த ராட்சத அலையில், சிக்கி ராஜேஷ் மாயமானாா். அவரை தேடும் பணியில் போலீஸாா் ஈடுபட்டனா். அன்றிரவு வரை தேடியும் ராஜேஷை கண்டுபிடிக்கமுடியவில்லை.
இதைத் தொடா்ந்து, இரண்டாம் நாளாக, செவ்வாய்க்கிழமை கடலோரக் காவல் படையினா் படகு மூலமாக, அந்தப் பகுதிக்குச் சென்று தேடும் பணியில் ஈடுபட்டனா். மேலும், உள்ளூரைச் சோ்ந்த மீனவா்கள் 4 படகுகள் மூலமாக தேடுதல் பணியில் ஈடுபட்டனா். இருப்பினும், மாலை வரை ராஜேஷை கண்டுபிடிக்க முடியவில்லை. எனினும், தேடுதல் பணி தொடா்ந்தது.