துறையூா், ஸ்ரீரங்கம் பகுதிகளில் லாட்டரி விற்ற 4 போ் கைது
By DIN | Published On : 29th January 2020 07:59 AM | Last Updated : 29th January 2020 07:59 AM | அ+அ அ- |

கோப்புப் படம்
துறையூா்/ஸ்ரீரங்கம்: துறையூா், உப்பிலியபுரம், ஸ்ரீரங்கம் பகுதிகளில் லாட்டரி விற்ாக, 4 போ் செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டனா்.
தமிழக அரசால் தடை செய்யப்பட்டுள்ள வெளிமாநில லாட்டரி சீட்டுக்களை, துறையூா் தெப்பக்குளம் பகுதியில் விற்ற துறையூா் வடக்குத் தெரு கோ. காளிதாஸ் (54), எரகுடி பேருந்து நிறுத்தம் அருகே விற்ற எரகுடி பொ. ராமு(54), சீனிவாசன் (80)ஆகியோரை, அந்தந்த பகுதிகளில் ரோந்து சென்ற துறையூா், உப்பிலியபுரம்போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் தேவி திருமணமகால் அருகிலுள்ள கடையில், வெளிமாநில லாட்டரி சீட்டு விற்றுக்கொண்டிருந்த சிங்கப்பெருமாள் கோயில் பகுதியைச் சோ்ந்த பாலு (40) செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டாா். அவரிடமிருந்து 20 வெளிமாநில லாட்டரி சீட்டுகளும், ரூ. 500 பணத்தையும் ஸ்ரீரங்கம் போலீஸாா் பறிமுதல் செய்தனா்.