ஐபிஎம் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளி நியமனம்

உலகின் முதன்மையான தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த.. 
ஐபிஎம் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளி நியமனம்


நியூயார்க்: ஐபிஎம் நிறுவனத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணா(57) நியமிக்கப்பட்டுள்ளதை அடுத்து பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை பணியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிர்வாகிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. 

உலகின் முதன்மையான தொழில்நுட்ப நிறுவனமான ஐபிஎம் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக தொழில்நுட்ப நிர்வாகியான இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அரவிந்த் கிருஷ்ணா தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஐபிஎம் நிறுவனத்தின் கிளவுட் மற்றும் அறிவாற்றல் மென்பொருள் பிரிவின் மூத்த துணைத்தலைவராக பதவி விகித்தவர். 

இதை அடுத்து வரும் ஏப்ரல் 6 ஆம் தேதி அந்த பொறுப்பேற்க உள்ளார். 

ஐபிஎம் தலைவர், தலைவர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரியாக இருந்த வந்த விர்ஜினியா ரோமெட்டி நிர்வாகத் தலைவராக தொடர்ந்து பணியாற்றுவார், மேலும் அவர் ஓய்வுபெறும் ஆண்டு இறுதி வரை பணியாற்றுவார். 

விர்ஜினியா ரோமெட்டி கூறுகையில், ஐபிஎம் நிறுவனத்தை அடுத்த சகாப்தத்திற்கு கொண்டு செல்லும் சரியான தலைமை நிர்வாகி அதிகாரி கிருஷ்ணா. அவர் "ஐபிஎம் நிறுவனத்தின் முக்கிய தொழில்நுட்பங்களை முன்னெடுத்து சென்றதில் குறிப்பிடத்தக்க முக்கிய பங்கு வகித்த ஒரு சிறந்த தொழில்நுட்பவியலாளர். அவர் வாடிக்கையாளர்களின் வணிகத்தில் மாற்றத்தை மேம்படுத்தி அறிவாற்றல் சகாப்தத்திற்கு கொண்டுச் சென்று நிலைநிறுத்தியவர் என்றும் அவரால் வணிகத்தை மேலும் சிறந்த உச்சத்திற்கு கொண்டுச் செல்ல முடியும் எனக் கூறினார். 

ஐபிஎம் நிறுவனத்தில் தலைமை செயல் அதிகாரியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள அரவிந்த் கிருஷ்ணா, கான்பூர் ஐஐடியில் இளங்கலை பட்டமும், அர்பானா-சாம்பேனில் இல்லினாய்ஸ் பல்கலையில் மின் பொறியியலில் முனைவர் பட்டமும் பெற்றார். பின்னர் 1990 ஆம் ஆண்டு ஐபிஎம்-ல் பணியில் சேர்ந்தார். 

தலைமை செயல் அதிகாரியாக அரவிந்த் கிருஷ்ணா கூறியதாவது: தலைமை நிர்வாக அதிகாரியாக தேர்வு செய்யப்பட்டுள்ளதில் மகிழ்ச்சி அடைந்துள்ளதாகவும், நிறுவனம் தன் மீது வைத்திருக்கும் நம்பிக்கைக்கு கடமைப்பட்டுள்ளேன். உலக முழுவதும் உள்ள ஐபிஎம் பணியாளர்களுடன் இணைந்த பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக தெரிவித்துள்ளார்.   

உலகளாவிய தகவல் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராக அரவிந்த் கிருஷ்ணா நியமனம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து சில பெரிய பன்னாட்டு நிறுவனங்களின் தலைமை பணியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நிர்வாகிகளின் பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. 

மைக்ரோசாப்ட் தலைமை நிர்வாக அதிகாரி சத்யா நாதெள்ளா, கூகுள் மற்றும் ஆல்பபெட் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, மாஸ்டர்கார்டு தலைமை நிர்வாக அதிகாரி அஜய் பங்கா, பெப்சிகோவின் முன்னாள் தலைமை நிர்வாக அதிகாரி இந்திரா நூயி மற்றும் அடோப் தலைமை நிர்வாக அதிகாரி சாந்தனு நாராயணன் ஆகியோர் அடங்கிய பட்டியலில் கிருஷ்ணாவும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com