சீன செயலிகளுக்கு இந்தியா தடை: அமெரிக்கா வரவேற்பு

சீன செயலிகள் மீதான இந்தியாவின் தடையை அமெரிக்கா வரவேற்கிறது, இது ‘தேசிய பாதுகாப்பை அதிகரிக்கும்’ என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
சீன செயலிகளுக்கு இந்தியா தடை: அமெரிக்கா வரவேற்பு


சீன செயலிகள் மீதான இந்தியாவின் தடையை அமெரிக்கா வரவேற்கிறது, இது ‘தேசிய பாதுகாப்பை அதிகரிக்கும்’ என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

எல்லையில் சீனாவுடன் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து, ஏற்கெனவே சீன செயலிகளுக்குத் தடை விதிக்கப்படலாம் என்று பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில், சீன செயலிகளிலிருந்து வரும் “அச்சுறுத்தல்களின் வெளிப்பாட்டை” மேற்கோள் காட்டி,  டிக்டாக், ஷேர் இட், யூசி பிரௌசர், ஹலோ ஆப் உள்ளிட்ட 59 சீன செயலிகளின் பயன்பாடுகளுக்கு இடைக்கால தடைவிதித்து திங்கள்கிழமை இந்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.

இந்திய இறையாண்மைக்கும், ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்பு ஆகியவற்றுக்கு அச்சுறுத்தலாக இருப்பதால் மத்திய அரசு இந்த முடிவை எடுத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பதட்டமான எல்லை நிலைப்பாட்டிற்கு மத்தியில் இந்த நடவடிக்கை பதிலடி கொடுக்கும் நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது. அரசுக்கு சொந்தமான தொலைத் தொடர்பு நிறுவனங்கள் சீன விற்பனையாளர்களை தங்கள் நெட்வொர்க் மேம்படுத்தல் டெண்டர்களில் இருந்து விலகுவதற்கான வேலையில் ஈடுபட்டுள்ளன. 

இந்த நிலையில் 59 சீன செயலிகளின் பயன்பாடுகளுக்கு இடைக்கால தடைவித்து இரண்டு நாள்களுக்குப் பிறகு, அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் மைக் பாம்பியோ இந்த நடவடிக்கையை வரவேற்றுள்ளார். மேலும் “சீன கம்யூனிஸ்ட் கட்சியின் அரசின் கண்காணிப்பு பின்னிணைப்புகளாக செயல்படக்கூடிய சில மொபைல் பயன்பாடுகளுக்கு தடை விதித்துள்ள இந்தியாவின் நடவடிக்கையை நாங்கள் வரவேற்கிறோம்.  “இந்தியாவின் தூய்மையான பயன்பாட்டு அணுகுமுறை இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் தேசிய பாதுகாப்பை அதிகரிக்கும்” என்று பாம்பியோ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

இந்த நிலையில் சுட்டுரை (டுவிட்டர்) வலைதளத்தைப் போன்று  சீனாவில் இது மிகவும் பிரபலமான வெய்போ சமூக வலைதளத்தில் இருந்து பிரதமர் மோடி விலகினார். கடந்த 2015-ஆம் ஆண்டு இதில் மோடி இணைந்ததில் இருந்து மோடி வெளியிட்டிருந்த 115 பதிவுகளும் கடந்த இரு நாள்களில் அகற்றப்பட்டன. எல்லையிலும் பொருளாதார நிலையிலும் கடுமையான எச்சரிக்கைகளைத் தந்ததைப் போல இது இப்போது "தனிப்பட்ட முறையிலும்" தந்த செய்தி என்று பாஜக கூறியது.

இதனிடையே, அமெரிக்க ஃபெடரல் கம்யூனிகேஷன்ஸ் கமிஷன் (எஃப்.சி.சி) சீன தொலைத் தொடர்பு நிறுவனங்களான ஹவாய் டெக்னாலஜிஸ் கம்பெனி மற்றும் இசட்டிஇ கார்ப்பரேஷன் மற்றும் அவற்றின் முதன்மை மற்றும் துணை நிறுவனங்கள் மற்றும் இணை நிறுவனங்களை "தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்கள்" என்று முறைப்படி அறிவித்துள்ளது. 

டிக்-டாக் செயலி தடை செய்யப்பட்ட விவகாரத்தில், தரவுகளை பாதுகாத்தல் மற்றும் பாதுகாப்பு தேவைகளில் இந்திய சட்டத்துக்கு உள்பட்டு தொடா்ந்து செயல்படுவோம். இந்திய பயனா்களின் எந்தவொரு தகவலையும், சீனா உள்பட எந்த நாட்டு அரசுடனும் எங்கள் நிறுவனம் பகிா்ந்துகொண்டதில்லை. எங்கள் நிறுவனம் பயனா்களின் ரகசியங்களை பாதுகாக்கவும், ஒருமைப்பாட்டுக்கும் அதிக முக்கியத்துவம் தருகிறது.’  மத்திய அரசின் உத்தரவுக்கு இணங்கி செயல்பட தயாராக இருப்பதாக அந்த நிறுவனம் செவ்வாய்க்கிழமை தெரிவித்திருந்தது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com