மணப்பாறை: பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் தொழிற்சங்கங்கள் ஆர்ப்பாட்டம்

மணப்பாறையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் - பொதுத்துறையை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்தும் தொழிற்சங்கங்களின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த தொழிற்சங்கங்கள்
பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்து ஆர்ப்பாட்டம் செய்த தொழிற்சங்கங்கள்

மணப்பாறையில், பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும் - பொதுத்துறையை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்தும் தொழிற்சங்கங்களின் சார்பாக ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் சிஐடியு, ஏஐடியுசி தொழிற்சங்கங்களின் சார்பாக, பெட்ரோல் டீசல் விலை உயர்வை கண்டித்தும், பொதுத்துறையை தனியாருக்கு தாரைவார்ப்பதை கண்டித்தும், பொது முடக்கத்தில் வருமானம் இழந்த ஆட்டோ தொழிலாளர்கள், சுமை தூக்கும் தொழிலாளர்கள்,  தரக்கடை வியாபாரிகள், தையல், கட்டுமானம் தொழிலாளர்கள் என அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.7500 வீதம் நிவாரணம் வழங்க வேண்டும், தொழிலாளர் சட்டங்களை முழுமையாக நீக்குவது, நான்கு தொகுப்புகளாக குறுக்குவது, வேலை நேரத்தை 12 மணி நேரமாக அதிகரிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை கைவிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மணப்பாறை பேருந்து நிலையம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

சிஐடியு மாவட்ட துணை தலைவர் எஸ்.எம்.ஷாஜகான். ஏஐடியுசி தலைவர் ஜனசக்தி உசேன் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் சிஐடியு, ஏஐடியுசி தொழிற் சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com