திருச்சியில் ரவுண்டானா, விளையாட்டு மைதானம் திறப்பு

திருச்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கட்டப்பட்டுள்ள ரவுண்டானா, விளையாட்டு மைதானங்களை அமைச்சர்கள் சனிக்கிழமை திறந்து வைத்தனர்.
திருச்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கட்டப்பட்டுள்ள ரவுண்டானா, விளையாட்டு மைதானங்களை  திறந்து வைத்த அமைச்சர்கள்.
திருச்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கட்டப்பட்டுள்ள ரவுண்டானா, விளையாட்டு மைதானங்களை திறந்து வைத்த அமைச்சர்கள்.


திருச்சி: திருச்சியில் ரூ.30 லட்சம் மதிப்பில் அமைக்கட்டப்பட்டுள்ள ரவுண்டானா, விளையாட்டு மைதானங்களை அமைச்சர்கள் சனிக்கிழமை திறந்து வைத்தனர்.

திருச்சி அண்ணா விளையாட்டு அரங்கத்தை சுற்றிலும் உள்ள ரேஸ் கோர்ஸ் சாலையில் பொதுமக்கள் அதிகளவு நடைபயிற்சி மேற்கொள்வது வழக்கம். இதன் காரணமாக அந்த சாலைகளில் பல்வேறு வசதிகளை மாவட்ட நிர்வாகம் ஏற்படுத்தி வருகிறது. 

இந்நிலையில் தன்னிறைவு திட்டத்தின் கீழ் ரூ.14 லட்சம் செலவில் புதிய ரவுண்டானா அப்பகுதியில் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. உடற்பயிற்சி மேற்கொள்பவா்களின் உருவ சிலைகளுடன் அமைக்கப்பட்டுள்ள புதிய ரவுண்டானாவை அமைச்சா்கள் வெல்லமண்டி என். நடராஜன், எஸ். வளா்மதி ஆகியோர் திறந்து வைத்தனா். 

இதன் தொடர்ச்சியாக திருச்சி மாநகர ஆயுதப்படை வளாகத்தில் ரூ.11.71 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்பட்ட மின்னொளி வசதியுடனான கைப்பந்து மைதானத்தையும், ரூ.4.55 லட்சம் செலவில் அமைக்கப்பட்ட கடற்கரை கைப்பந்து மைதானத்தையும் அமைச்சா்கள் திறந்து வைத்தனா். 

இந்த விழாவில் மத்திய மண்டல ஐஜி ஜெயராம், கூடுதல் ஆணையா் அமல்ராஜ், டிஐஜி ஆனி விஜயா, திருச்சி மாநகர காவல்துறை ஆணையா் லோகநாதன், திருச்சி மாவட்டகாவல்துறை கண்காணிப்பாளா் ஜியா உல் ஹக், இணை ஆணையா் நிஷா உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com