மானாமதுரையில் எஸ்.ஆர்.இ.எஸ் ரயில்வே தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் எஸ்.ஆர்.இ.எஸ் ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 
சமூக இடைவேளியை கடைபிடித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பிய எஸ்.ஆர்.இ.எஸ் ரயில்வே தொழிலாளர்கள். 
சமூக இடைவேளியை கடைபிடித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பிய எஸ்.ஆர்.இ.எஸ் ரயில்வே தொழிலாளர்கள். 


மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் எஸ்.ஆர்.இ.எஸ் ரயில்வே தொழிற்சங்கம் சார்பில் 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

மத்திய அரசு ரயில்வே துறையில் தனியாரை அனுமதிப்பதைக் கண்டித்தும், ரயில்வேயில் காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும் என்பது உள்ளிட்ட 8 அம்ச கோரிக்ககைளை வலியுறுத்தி ரயில்நிலையம் முன்பு நடந்த இந்த ஆர்ப்பாட்டதுத்துக்கு எஸ்.ஆர்.இஎஸ் மத்திய சங்கத்தின் மாநில ஒருங்கிணைப்புச் செயலாளர் ஜி.ராஜாராம் தலைமை தாங்கினார். 

இதில் பங்கேற்ற ரயில்வே தொழிலாளர்கள் சமூக இடைவேளியை கடைபிடித்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். 

ஆர்ப்பாட்டத்தில் எஸ்.ஆர்.இ.எஸ் மானாமதுரை கிளை நிர்வாகிகள் சகாதேவன், மணிவண்ணன், மோகன்,சந்தோஷ்,பிரதாபன், சீமைச்சாமி, குமரேசன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com