தூத்துக்குடி மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸூக்கு தடை

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பயன்படுத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தடை விதித்துள்ளார்
தூத்துக்குடி மாவட்டத்தில் பிரண்ட்ஸ் ஆஃப் போலீஸூக்கு தடை

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலையங்களில் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பயன்படுத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தடை விதித்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் தந்தை-மகன் காவல்நிலையத்தில் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் சிபிசிஐடி போலீசார் 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

இந்த நிலையில் இவர்களுக்கு உடந்தையாக இருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் போலீசையும் கைது செய்ய வேண்டும் என்று வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் தூத்துக்குடி மாநகர் மற்றும்புறநகர்ப் பகுதிகளில் காவல் நிலைய உதவி ஆய்வாளர்களுடன் இருசக்கர வாகனத்தில் கம்புகள் வைத்து பொதுமக்களுக்கு வியாபாரிகளை மிரட்டி வருவதாக தொடர்ந்து மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரிடம் வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.

இதையடுத்து இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் நிலையம் மற்றும் உதவி ஆய்வாளர்கள் பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் பயன்படுத்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஜெயக்குமார் உத்தரவிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com