விழுப்புரம் மாவட்ட சுங்கச்சாவடிகளில் தீவிர வாகன சோதனை

கரோனா பரவலைத் தடுக்க ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு முடக்கம் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காவலர்கள் வாகன பரிசோதனை
சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் காவலர்கள் வாகன பரிசோதனை

கரோனா பரவலைத் தடுக்க ஜூலை மாதத்தின் அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு முடக்கம் அமல்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. 

இதன்படி, விழுப்புரம் மாவட்டத்திலும் சனிக்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் இந்த உத்தரவு அமலாகியுள்ளது.

சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் அனைத்து சுங்கச் சாவடிகளிலும் காவலர்கள் முகாமிட்டு, அனுமதி இல்லாமல் வரும் வாகனங்களை பறிமுதல் செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் ஆய்வாளர் மகேஸ்வரி தலைமையிலும், ஓங்கூர் சுங்கச்சாவடியில் டிஎஸ்பி கனகேஸ்வரி தலைமையில் காவலர்கள் தொடர்ந்து வாகன பரிசோதனை செய்து வருகின்றனர்.

விழுப்புரம் மாவட்ட கண்காணிப்பாளர் ராதாகிருஷ்ணன், விழுப்புரம் திண்டிவனம் மரக்காணம் பகுதிகளில் எல்லைப்பகுதி சோதனைச் சாவடிகளுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

இந்த ஆய்வின் போது மும்பையிலிருந்து அனுமதியின்றி வந்த ஆம்னி பேருந்தை காவலர்கள்பறிமுதல் செய்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com