காமராஜர் பிறந்தநாள்: திமுக சார்பில் மரியாதை

காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் திமுக சார்பில் புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது. 
காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் திமுக சார்பில் புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது. 
காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் திமுக சார்பில் புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது. 



திருச்சி: காமராஜரின் பிறந்தநாளை முன்னிட்டு திருச்சியில் திமுக சார்பில் புதன்கிழமை மரியாதை செலுத்தப்பட்டது. 

திருச்சி தில்லைநகரில் உள்ள திமுக அலுவலகத்தில் கட்சியின் முதன்மைச் செயலர் கே.என். நேரு, காமராஜரின் உருவப்படத்தை திறந்து வைத்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். 

மத்திய மாவட்ட பொறுப்பாளர் வைரமணி, மாவட்ட ஊராட்சிக் குழுத் தலைவர் தர்மன் ராஜேந்திரன், ஒன்றியச் செயலர் கதிர்வேல், பகுதி செயலர் மோகன்தாஸ் உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

இதேபோல, திருச்சி தெற்கு மாவட்ட திமுக சார்பில், சத்திரம் பேருந்துநிலையம் அருகேயுள்ள கட்சி அலுவலகத்தில் காமராஜரின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், எம்எல்ஏ-வுமான அன்பில் மகேஷ் பொய்யா மொழி, காமராஜரின் உருவப்படத்தை திறந்து மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.  தலைமை செயற்குழு உறுப்பினர் சேகரன், மாவட்ட பொருளாளர் கோவிந்தராஜ், வண்ண அரங்கநாதன் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் பலரும் மலர்கள் தூவி மரியாதை செலுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com