7 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன

கரோனா பரிசோதனையை மேலும் விரிவுபடுத்துவதற்காக தமிழகத்திற்கு மேலும் 7 லட்சம் கரோனா நோய்த் தொற்றைக் கண்டறியும் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வந்தடைந்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


சென்னை: கரோனா பரிசோதனையை மேலும் விரிவுபடுத்துவதற்காக தமிழகத்திற்கு மேலும் 7 லட்சம் கரோனா நோய்த் தொற்றைக் கண்டறியும் பிசிஆர் பரிசோதனை கருவிகள் வந்தடைந்துள்ளதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் கரோனாவைக் கட்டுப்படுத்துவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதன்படி, மூச்சுத் திணறல் உள்ளவா்கள் மற்றும் இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் தொற்று அறிகுறிகள் உள்ள அனைவருக்குமே கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நாளுக்கு நாள் நோய்த்தொற்று பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கையானது அதிகரித்து வரும் நிலையில், தமிழகத்தில் தொண்டையில் இருந்து திசுக்களை எடுத்து கரோனா பரிசோதையானது செய்யப்பட்டு வருகிறது. இதற்கு ஐசிஎம்ஆர் பரிந்துரைத்த உபகரணங்களை பயன்படுத்தி வருகின்றனர்.

தமிழகத்தில் நாள் தோறும் தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், மேலும் கரோனா பரிசோதனைக்காக மேலும் 10 லட்சம் பிசிஆர் பரிசோதனை கருவிகளை வாங்க தென்கொரியாவிடம் தமிழக அரசு ஆர்டர் கொடுத்திருப்பதாகவும் அதிகாரிகள் கூறினர். 

இந்நிலையில், கரோனா பரிசோதனையை மேலும் விரிவுபடுத்துவதற்காக தமிழகத்திற்கு மேலும் 7 லட்சம் கரோனா நோய்த் தொற்றைக் கண்டறியும் பிசிஆர் பரிசோதனை கருவிகள் புதன்கிழமை இரவு வந்தடைந்துள்ளதாகவும்,  இந்த பரிசோதனை கருவிகள் விரைவில் அனைத்து மாவட்ட மருத்துவமனைகளுக்கும் பிரித்து அனுப்பப்படும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறினர். 

கரோனா பரிசோதனையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக உள்ளதாக தமிழக அரசு தொடர்ந்து கூறி வரும் நிலையில், தற்போது மேலும் 7 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com