முகநூலில் லைவ் விடியோவைப் பதிவிட்டு ஓட்டுநர் தற்கொலை

முகநூலில் லைவ் விடியோவைப் பதிவிட்டு விட்டு திருப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்து கொண்ட ராம்குமார்​
தற்கொலை செய்து கொண்ட ராம்குமார்​


திருப்பூர்: முகநூலில் லைவ் விடியோவைப் பதிவிட்டு விட்டு திருப்பூரைச் சேர்ந்த தனியார் நிறுவன ஓட்டுநர் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்தவர் ராம்குமார்(37), இவரது மனைவி சுகாசினி(34), இவர்களுக்கு 13 வயதில் மகனும் உள்ளார். ராம்குமார் திருப்பூர் மும்மூர்த்தி நகர் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து மனைவியுடன் தங்கியிருந்தார். மேலும், அதே பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். 

இந்த நிலையில், கடந்த புதன்கிழமை மாலையில் வீட்டில் தனியாக இருந்தபோது தாராபுரத்தில் உள்ள தனது தந்தையை செல்லிடப்பேசியில் தொடர்பு கொண்டுள்ளார். அப்போது தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், மகனைப் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாறு தெரிவித்துவிட்டு இணைப்பைத் துண்டித்துள்ளார்.

இதன் பிறகு முகநூல் பக்கத்தில் லைவ் விடியோவை ஆன் செய்த ராம்குமார் தூக்கிட்டுத் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்தப் பதிவைப் பார்த்த அவரது நண்பர்கள் அவரது மனைவிக்குத் தகவல் கொடுத்தனர். 

இதையடுத்து சுகாசினி வீட்டுக்குச் சென்று பார்த்தபோது தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. 

இதுகுறித்து அனுப்பர்பாளையம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவர் எழுதிய கடிதத்தைக் கைப்பற்றினர். இதில், தனது இறப்பிற்கு யாரும் காரணம் இல்லை, மானம்கெட்ட உலகத்தில் இனி வாழ எனக்கு விருப்பம் இல்லை என எழுதி வைத்துள்ளது தெரியவந்தது. 

மேலும், ராம்குமார் மது அருந்தியிருந்ததும் காவல் துறையினரின் விசாரணையில் தெரியவந்துள்ளது. ராம்குமார் தற்கொலை செய்து கொண்ட விடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com