மானாமதுரை தலைமை தபால் அலுவலகம்  மூடல்: பெண் அதிகாரிக்கு கரோனா தொற்று

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தலைமை தபால் அலுவலக பெண் அதிகாரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வியாழக்கிழமை இந்த அலுவலகம் மூடப்பட்டது.  
பெண் அதிகாரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மானாமதுரை தலைமை தபால் அலுவலகம் மூடப்பட்டது.
பெண் அதிகாரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் மானாமதுரை தலைமை தபால் அலுவலகம் மூடப்பட்டது.

மானாமதுரை: சிவகங்கை மாவட்டம் மானாமதுரை தலைமை தபால் அலுவலக பெண் அதிகாரிக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் வியாழக்கிழமை இந்த அலுவலகம் மூடப்பட்டது.  

மானாமதுரையில் காந்திசிலை அருகே சிவகங்கை சாலையில் தலைமை தபால் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் ஏராளமான கிளை தபால் அலுவலகங்கள் செயல்பட்டு வருகின்றன. தலைமை தபால் அலுவலகத்துடன் இந்தியா போஸ்டல் வங்கியும் இணைந்து செயல்பட்டு வருகிறது. இந்த வங்கியில் பணிபுரிந்து வந்த மதுரையைச் சேர்ந்த பெண் அதிகாரிக்கு திடீரென உட ல்நலக்குறைவு ஏற்பட்டதையடுத்து அவர் கரோனா பரிசோதனை மேற்கொண்டார். அப்போது இந்த பெண் அதிகாரிக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. 

இதையடுத்து மானாமதுரை தலைமை தபால் அலுவலகம் மூடப்பட்டது. பேரூராட்சி துப்புரவு பணியாளர்கள் தபால் அலுவலக வளாகம் முழுவதும் கிருமிநாசினி தெளித்தனர். மேலும் தபால் அலுவலகத்தில்  பணியாற்றி வந்த அனைத்து ஊழியர்களுக்கும் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மீண்டும் தலைமை தபால் அலுவலகம்  திறக்கப்படும் வரை இந்த அலுவலகம் சார்ந்த பணிகள் மானாமதுரை கன்னார்தெரு பகுதியில் உள்ள கிளை தபால் அலுவலகத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com